முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசில் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் டெல்லியில் இன்று காலமானார். நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த இவருக்கு வயது 88 .
1930ம்ஆண்டுஜூன் 3ம்தேதிகர்நாடகமாநிலம்மங்களூருவில்பிறந்தஜார்ஜ்பெர்னாண்டஸ்தொழிற்சங்கங்களின்முன்னோடியாகஇருந்தார்.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனப் படுத்தியபோது அதைக் கடுமையாக எதிர்த்தார். அப்போது உருவான ஜனதா கட்சியில் முக்கிய பங்கு வகித்த அவர் பின்னர் சமதா கட்சியைத் தொடங்கினார்.

இவர் 1998 முதல் 2004 வரைவாஜ்பாயி அரசில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது தான் கார்கில் போர் நடைபெற்றது. மேலும் தகவல்தொடர்ப்பு, தொழில்துறைமற்றும்ரயில்வேதுறைஅமைச்சராகவும்ஜார்ஜ்பெர்னாண்டஸ்இருந்துள்ளார். 2010ம்ஆண்டுவரைமாநிலங்களவைஉறுப்பினராகஇருந்தவர்.

தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுடன் மிக நெருக்கமாக இருந்தார், முக்கியமாக கருணாநிதிக்கு நல்ல நண்பர். அதே போல் விடுதலைப் புலிகள் ஆதரவாளரான ஜார்ஜ்பெர்னாண்டஸ் அவர்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார்.

ஜார்ஜ்பெர்னாண்டஸ் அமைச்சராக இருந்தபோது கோகோ கோலா நிறுவனத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து அந் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறியது.
இந்நிலையில் நீண்ட காலமாக உடல் நலம் குன்றியிருந்த ஜார்ஜ்பெர்னாண்டஸ் இன்று காலை டெல்லியில் மரணமடைந்தார்.
