Asianet News TamilAsianet News Tamil

துப்புரவு சங்க பொதுச்செயலாளர் மரணம்... மாநகராட்சி கமிஷனர் மீது திடுக் குற்றச்சாட்டு..!

மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனுக்கு எதிராக பல்வேறு புகார்கள் பற்றி எரிகின்றன. 

General Secretary of the Cleaning Association dies ... shocking accusation against the Corporation Commissioner
Author
Madurai, First Published Nov 21, 2021, 6:28 PM IST

மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனுக்கு எதிராக பல்வேறு புகார்கள் பற்றி எரிகின்றன. 

மதுரை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகி ச.முருகையா, தொழிலாளர்கள் கோரிக்கை சம்பந்தமாக மாநகராட்சி உயர் அதிகாரியான கார்த்திகேயனை சந்திக்க சென்றுள்ளார். ஆனால் முருகையாவை சந்திக்க மறுத்துள்ளார் ஆணையரான கார்த்திகேயன்.  முருகையாவை காக்க வைத்து அலைத்ததால் மன உளைச்சலுக்கு ஆளான தொழிற்சங்க நிர்வாகி முருகையா திடீரென இறந்து விட்டார். ஏற்கனவே, மாநகராட்சி துாய்மை பணியாளர் ஒருவர் மின்சாரம் தாக்கி ஒரு கையை இழந்து விட்டார்.General Secretary of the Cleaning Association dies ... shocking accusation against the Corporation Commissioner

ஆனால், அவருக்கு எந்த நிவாரணமும் தரப்படவில்லை. இதனால் கார்த்திகேயனை மாற்றா வேண்டும் என துாய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அடுத்து ஆர்.எஸ்.எஸ்., தலைவருக்கு ஆதரவாக மதுரை மாநகராட்சி சார்பில் சுற்றறிக்கை அனுப்பட்டதும் கார்த்தியேயன் மீது சர்ச்சையை பாரதிய ஜனதா கட்சியின் சார்பு அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்க்(RSS) தலைவர் மோகன் பகவத் கடந்த ஜூலை மாதன் மதுரை வந்தார். இதையொட்டி விமானநிலையம் முதல் அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்கள் வரை சாலைகளைச் சீரமைக்கச் சொல்லி மதுரை மாநகராட்சி உத்தரவிட்டது. 

தனியொரு அமைப்பின் தலைவர் வருகை தருவதற்கு உள்ளாட்சி உத்தரவு பிறப்பிக்க  வேண்டுமா என கேள்வி எழுப்பினர். மாநகராட்சி உதவி ஆணையாளர் (பணியமைப்பு) சண்முகம் உத்தரவில், ’மதுரை மாநகராட்சி மண்டலம் - 4 சத்யசாய் நகரில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் RSS தலைவரான மோகன்பகவத் கலந்து கொள்ள உள்ளதால், சாலைகளை சீரமைத்தல், தெரு விளக்குகளை பராமரித்தல், சாலைகளை சுத்தமாக வைத்தல், போன்ற பணிகளை செய்திடவும் அவர் பயணிக்கும் நேரங்களில் சாலைகளில் மாநகராட்சிப் பணிகளான சீரமைப்பு பணிகள் ஏதும் நடைபொறாமல் இருப்பதை கண்காணிக்கும் பணிகளை கவனித்து வர அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.  General Secretary of the Cleaning Association dies ... shocking accusation against the Corporation Commissioner


இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயனிடம் விளக்கம் கேட்டபோது,  ’அரசால் Z பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்ட நபர்களுக்கு வழக்கமான பாதுகாப்பு எப்போதும் மாநகராட்சியால் தரப்படுவதுதான். அதன் அடிப்படையிலேயே தற்போது மோகன் பகவத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மற்றபடி அவருக்காக என்று சிறப்பு நடவடிக்கைகள் எதுவும் மாநகராட்சியால் மேற்கொள்ளப்படவில்லை’ என அப்போது மறுத்தார். 

மதுரை புதுமண்டப கடை உரிமையாளர்களுக்கு மாநகராட்சி குன்னத்துார் சத்திரத்தில் கடைகள் ஏலம் விடப்பட்டு ஒதுக்கீடு செய்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்திற்குட்பட்ட புது மண்டபத்தை புனரமைக்க அங்கிருந்த 200க்கும் மேற்பட்ட கடைகளை காலி செய்ய உத்தரவிடப்பட்டது. இவர்களுக்கு அருகில் உள்ள குன்னத்துார் சத்திரத்தில் 190 கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 40 கடைகள் தவிர மற்ற கடைகள் ஏலம் விடப்பட்டு சதுரடி கணக்கில் வாடகை நிர்ணயிக்கப்பட்டது. ஏலம் எடுத்தவர்கள் நவ.,1 முதல் இங்கேயும், புதுமண்டப கடையை காலி செய்யாததால் கோயில் நிர்வாகத்திற்கும் வாடகை செலுத்தும் நிலையுள்ளது. 

குன்னத்துார் சத்திரத்தில் ஏற்கனவே இருந்தவர்களில் சிலர் கடை ஒதுக்கீடு செய்ததில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை எனக்கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். புதுமண்டபத்தை காலி செய்யாத நிலையில், சத்திரத்தில் மின் இணைப்பு இல்லாததால் அங்கு இடமாற முடியாமல் உரிமையாளர்கள் தவிக்கும் நிலையில் கடைகள் திறக்க நீதிமன்றம் தடைவிதித்தால் என்ன செய்வது என்று குழப்பத்தில் உள்ளனர்.அவர்கள் கூறியதாவது: மாநகராட்சி தரப்பில் ஏலம் விடும்போதே பல குழப்பங்கள் ஏற்பட்டன.General Secretary of the Cleaning Association dies ... shocking accusation against the Corporation Commissioner

சங்க தலைவருக்கு ஏலம் விடப்படாமல் கடை(எண் 156) ஒதுக்கப்பட்டது. இணைச்செயலாளருக்கு ஒதுக்கப்பட்ட கடைக்கு (67) சதுரடி ரூ.80 என்ற அடிப்படையில் மிகக்குறைந்த வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பலரும் செல்வாக்கை பயன்படுத்தி கடைகளை குறுக்கு வழியில் பெற்றுள்ளனர். சிலர் உள்வாடகைக்கு விட உள்ளனர். இச்சூழலில் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாலும், இன்னும் 40 கடைகளுக்கு ஏலம் விடப்படாததாலும் சத்திரத்திற்கு மாறுவதில் சிக்கல் உள்ளது.

 சத்திரத்தின் தரைதளத்தில் உள்ள கடைகளுக்கு செல்ல குறுகிய படிக்கட்டுகள் உள்ளன. அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனே முதல்தளத்திற்கு வரமுடியாதவாறு வடிவமைத்துள்ளனர். இதற்கெல்லாம் காரணம் மாநகராட்சி ஆணையர் கார்த்தியேன் மட்டுமே என பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios