Asianet News TamilAsianet News Tamil

ஜெனரல் பிபின் ராவத்தின் சகோதரர் விஜய் என்ன செய்தார் தெரியுமா..? இன்ப அதிர்ச்சியில் பாஜக..!

ஏற்கெனவே பிபின் ராவத் ஆர்.எஸ்.எஸ் அனுதாபி என்று கூறப்பட்டது. 

General Bipin Rawat's brother Vijay to join BJP
Author
Uttarakhand, First Published Jan 19, 2022, 12:07 PM IST

மறைந்த முப்படை தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின்  இளைய சகோதரர் கர்னல் விஜய் ராவத் பாஜகவில் சேர உள்ளார். இதற்காக  அவர் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியையும் சந்தித்தார்.

இந்தியாவின் முன்னாள் முப்படை தலைமை தளபதியான பிபின் ராவத் கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி அன்று தமிழகத்தில் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட மொத்தம் 13 பேர் மரணமடைந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த  நாட்டையே உலுக்கியது.General Bipin Rawat's brother Vijay to join BJP

இந்த விபத்து நடந்த நாளில் பிபின் ராவத், வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரிக்கு உரை நிகழ்த்த சென்றிருந்தார். அந்த கோர விபத்தில் பிபின் ராவத்தின் அன்பு மனைவி மதுலிகா ராஜே சிங் ராவத், அவரது பாதுகாப்பு அதிகாரி பிரிகேடியர் எல்எஸ் லிடர்,  Mi-17V5 விமானியான ஸ்குவாட்ரான் லீடர் குல்தீப் சிங், துணை விமானி. ஜூனியர் வாரண்ட் அதிகாரி ராணா பிரதாப் தாஸ், விங் கமாண்டர் பிருத்வி சிங் செளஹான்,லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங், ஜூனியர் வாரண்ட் அதிகாரி அரக்கல் பிரதீப், ஹவில்தார் சத்பால் ராய், நாயக் குர்சேவக் சிங், நாயக் ஜிதேந்திர குமார், லான்ஸ் நாயக் பி சாய் தேஜா மற்றும் லான்ஸ் நாயக் விவேக் குமார்  ஆகியோர் இறந்தனர்.

இந்த விபத்து நடந்ததற்கான காரணத்தை தெரிந்துக்கொள்ள விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், விசாரணையின் போது கிடைத்த முதற்கட்ட தகவல்கள் குறித்து மத்திய அரசு அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையில் விமான டேட்டா ரெக்கார்டர் மற்றும் காக்பிட் குரல் ரெக்கார்டர் ஆகியவற்றை விசாரணைக்குழு ஆய்வு செய்துள்ளதாக இந்திய விமானப்படை சார்பில் கூறப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.General Bipin Rawat's brother Vijay to join BJP


இந்த விபத்து நடந்தது எப்படி என்று பல்வேறு விதமான காரணங்கள் செய்திகளில் வெளியானது. சரியான காரணங்கள் வரும் முன்னர் யூகத்தின் அடிப்படையில் கூறக் கூடாது என அறிவுறுத்தப்பட்டனர். இந்த அறிக்கையில், நீலகிரி மலைப்பகுதியில் வானிலையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றத்தால் மேகங்கள் நுழைந்ததன் விளைவாக இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணைக்குழு கூறியுள்ளது.

அந்த மேக கூட்டங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல் விமானி ஹெலிகாப்டரின் திசையை மாற்றும் கட்டாயத்துக்கு வழிவகுத்தது என்றும் அதன் விளைவாக நிலப்பரப்பில் ஹெலிகாப்டரை தரையிறக்குவதற்கு விசையை கட்டுப்படுத்த வழியின்றி இந்த கோர விபத்து நடந்ததாக விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

விசாரணை அறிக்கையில், “இயந்திர கோளாறு, திட்டமிட்ட சதி, கவனக் குறைவு ஆகிய காரணங்களால் விபத்து ஏற்படவில்லை என விசாரணை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பள்ளத்தாக்கில் வானிலையில் ஏற்பட்ட எதிர்பாரா மாற்றத்தால், மேகங்களுக்குள் ஹெலிகாப்டர் நுழைந்ததால் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.General Bipin Rawat's brother Vijay to join BJP

மேலும், ஹெலிகாப்டரில் கிடைத்த கறுப்புப் பெட்டியை முழுமையாக ஆய்வு செய்தது மட்டுமல்லாமல், அனைத்து சாட்சிகளிடமும் முறையாக விசாரணை முடிந்த பின்பு தான் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தான் பிபின் ராவத்தின் சகோதரர் பாஜகவில் இணைந்துள்ளார். ஏற்கெனவே பிபின் ராவத் ஆர்.எஸ்.எஸ் அனுதாபி என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவரது சகோதரரும் பாஜகவில் இணைந்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios