விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு சவால் விடுத்திருந்த நிலையில் நடிகை காயத்ரி ரகுராமின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. 

கூம்பாக இருந்தால் கோயில் , உயர்வாக இருந்தால் தேவாலயம், அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது கோயில் என திருமாவளவன் பேசியதற்கு நடிகை காயத்ரி ரகுராம் கடுமையாக சாடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை பகிர்ந்து வந்தார். அதில், திருமாவளவனை எங்கு பார்த்தாலும் செருப்பால் அடியுங்கள். அவர் எம்.பி என்றால் 5 முழ நீளத்தில் கூந்தலா வளர்ந்திருக்கிறது. 

அவருக்கு சேலைகளை அல்ல. மடிசார்களை அனுப்புங்கள் இந்துக்களே என காரசாரமாக பதிவிட்டு வந்தார். இதற்கு விசிக கட்சியினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். அவரது வீட்டின் முன் முற்றுகையிட்டனர். அதற்கு பதிலளித்த காயத்திரி ரகுராம் தான் சென்னையில் இல்லை 27ம் தேதி சென்னை மெரினா பீச்சுக்கு தனியாக வருகிறேன். அப்போது யார் வேண்டுமானாலும் இதுபற்றி கேட்டுக் கொள்ளுங்கள்’’எனத் தெரிவித்து இருந்தார். 

எனது மதத்திற்காகவும், நாட்டிற்காகவும் உயிரை கூட கொடுக்க தயார் எனவும் கூறி இருந்தார். இந்நிலையில், அவரது பதிவுகள் வன்முறையை தூண்டுவதாகவும் ட்விட்டர் விதிமுறைகளை மீறிவிட்டதாகவும் கூறி அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. 3 லட்சம் ஃபாலோயர்களைக் கொண்டிருந்தார் காயத்ரி ரகுராம். இது காயத்ரியின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.