மற்றவர்கள் பேசுவதை ரெக்கார்ட் செய்வதையே தொழிலாக வைத்திருக்காதீங்க அண்ணாமலை..! லெப் ரைட் வாங்கும் காயத்ரி

 மற்றவர்களைப் ரெக்கார்ட் செய்யும் தொழிலாக வைத்துக் கொள்ளாதீர்கள். தனியுரிமையை மீறுவது நல்லதல்ல. வருமான வரி மற்றும் ED நடவடிக்கை எடுக்கட்டும் என அண்ணாமலையை காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Gayathri Raghuram questioned Annamalai when will she go to CBI office with property list of DMK officials

திமுக-பாஜக மோதல்

திமுக- பாஜக இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் திமுக நிர்வாகிகளான ஜெகத்ரட்சகனுக்கு ரூ.50,219.37 கோடி, எ.வ.வேலுவுக்கு ரூ.5,552.39 கோடி, கே.என்.நேருவுக்கு ரூ.2,495.14 கோடி, கனிமொழிக்கு ரூ.830.33 கோடி, கலாநிதி மாறனுக்கு ரூ.12,450 கோடி என திமுக நிர்வாகிகளின் 17 பேரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1.34 லட்சம் கோடி என கடந்த வாரம் அண்ணாமலை பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த உதயநிதி, ஆர்எஸ்.பாரதி உள்ளிட்டவர்கள் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்தநிலையில் பாஜக மாநில தலைவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இபிஎஸ்யை பொதுச்செயலாளராக அங்கீகரித்த தேர்தல் ஆணையம்..! இரட்டை இலை சின்னமும் ஒதுக்கீடு- அதிர்ச்சியில் ஓபிஎஸ்

 

சரியான ஆதாரங்கள் கொடுங்கள்

அதில் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பேசுவதாக குறிப்பிட்டுள்ளார். தமிழக முதல்வரின் மகன் உதயநிதியும்,  மருமகன் சபரீசனும்  ஒரு வருடத்தில் 30,000 கோடி ரூபாய் குவித்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் செய்தியாளர் ஒருவருடன் உரையாடி ஆடியோ என தெரிவித்துள்ளார்.  இந்த ஆடியோ சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக டுவிட்டர் பதிவிட்ட முன்னாள் பாஜக நிர்வாகியும், நடிகையுமான காயத்ரி ரகுராம், திமுக பற்றிய சரியான ஆவணத்துடன் கூடிய ஆதாரங்களை தமிழக மக்களிடம் கொடுங்கள். குறைந்தபட்சம் அதை சிபிஐ அல்லது ஈடி அல்லது வருமான வரிக்கு துறை கொடுங்கள்.. அனைத்தும் மத்திய அரசு துறை. சில ஆடியோ அல்லது வீடியோ கொடுக்க வேண்டாம். எல்லாவற்றின் நேர விரயம். மற்றவர்களை இழிவுபடுத்துவதற்காக உங்கள் வார்ரூம் வீடியோ ஆடியோவையும் பார்த்தோம்.

 

ரெக்கார்டு செய்வதை தொழிலாக வைக்காதீர்

இப்போ PTR மற்றும் சபரீஷன் ஆடியோவில் புதிதாக எதுவும் இல்லை. அவதூறு தந்திரம் மட்டுமே.வேலையில்லா ஆடியோ வீடியோ கட்சி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பாஜக (BJP) அல்ல, ஆனால் இது அஜக (AJP) மாறிவிட்டது. 100 பேர் 100 விஷயங்களை விவாதிப்பார்கள், 100 பேர் 100 பேரை சந்திப்பார்கள். ஆனால் அது ஆதாரம் இல்லை. அவர் தோராயமாக 30,000 கோடி ரூபாய் என்று கூறுகிறார். அதை எப்படி ஆதாரம் என்று சொல்ல முடியும்? மற்றவர்களைப் ரெக்கார்ட் செய்யும் தொழிலாக வைத்துக் கொள்ளாதீர்கள். தனியுரிமையை மீறுவது நல்லதல்ல. வருமான வரி மற்றும் ED நடவடிக்கை எடுக்கட்டும். ஒரு ஸ்டிங் ஆபரேஷனில் 6.5 லட்சம் கோடியை பார்த்ததாக அமர்பிரசாத் ரெட்டி கூறினார்.

 

 சிபிஐக்கு எப்போ போறீங்க ?

ஒரு தோராயமான எண்களைக் கொடுப்பது போன்றது. PTR குரல் edited & stitched என்றால் என்ன செய்வது?மற்றவர்களை சுட்டிக்காட்டும் முன் உங்கள் குழுவையும் உங்களையும் சுத்தமாக வைத்திருங்கள். திமுக குடும்ப சொத்துக்கள் தொடர்பான திமுக கோப்புகளை தாக்கல் செய்ய சிபிஐக்கு செல்ல உள்ளதாக அண்ணாமலை அறிவித்து 5 நாட்கள் ஆகிறது. அது என்ன ஆனது? என கேள்வி எழுப்பியுள்ளார். 

இதையும் படியுங்கள்

யார் இந்த ஜெகத்ரட்சகன்.?அரசியலில் உயர்ந்தது எப்படி.? சொத்து மதிப்பு என்ன தெரியுமா.? தலை சுற்றவைக்கும் தகவல்கள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios