தமிழகத்தில் முதல் அலையை விட 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து, தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் பொங்கலுக்குப் பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் முதல் அலையை விட 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து, தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்கள் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மேலும், கொரோனா 3வது அலை தொடங்கி விட்டதாகவும் தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இதனை கட்டுப்படுத்த இன்று முதல் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் கொரோனா பரவல் மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வர அதிகம் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு தீவிர கட்டுப்பாடுகள் அமலாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த சில நாட்களில், கொரோனா பரவல் மேலும் வேகமெடுக்கும் பட்சத்தில், இன்னும் கூடுதல் கட்டுப்பாடுகளை அரசு அறிவிக்கும் வாய்ப்பும் அதிக உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதனிடையே, திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் ஆளுங்கட்சி மீது மக்களிடம் அதிருப்தி இருந்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவை காரணம் காட்டி நகராட்சி தேர்தலை தள்ளி வைக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
