சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த, ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும், இது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாகவும் கூறப்பட்டது.  

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது வதந்தி என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருடன், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடை செய்யப்பட்ட பகுதிகள் மட்டுமின்றி 15 மண்டலங்களிலும் தெருவுக்கு தெரு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்தார்.