Asianet News TamilAsianet News Tamil

மதுரை உள்பட நான்கு மாநகராட்சிகளுக்கு முழு ஊரடங்கு... முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு.!!

சென்னை, கோவை, மதுரையில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும். ஞாயிறு காலை 6 மணி முதல் புதன் இரவு 9 மணிவரை முழுமையான ஊரடங்கு அமலில் இருக்கும்.மேலும் சேலம், திருப்பூரில் ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 28 வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 
 
Full curfew for four municipalities including Madurai ... Chief Minister Edappadi Palanisamy orders
Author
Tamilnádu, First Published Apr 24, 2020, 8:46 PM IST

T.Balamurukan

சென்னை, கோவை, மதுரையில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும். ஞாயிறு காலை 6 மணி முதல் புதன் இரவு 9 மணிவரை முழுமையான ஊரடங்கு அமலில் இருக்கும்.மேலும் சேலம், திருப்பூரில் ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 28 வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

Full curfew for four municipalities including Madurai ... Chief Minister Edappadi Palanisamy orders

முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 5 மாநகராட்சிகள் தவிர மற்ற மாநகராட்சிகளில் வழக்கமான கட்டுப்பாடுகள் தொடரும்.முழுமையான ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள மட்டுமே அனுமதி. மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலனன்ஸ் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. தலைமைச் செயலகம், சுகாதாரம், குடிநீர் வழங்கல் துறை, காவல்துறை சார்ந்த பணிகளுக்கு அனுமதி. மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு தேவைப்படும் 33  சதவீத பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். 

Full curfew for four municipalities including Madurai ... Chief Minister Edappadi Palanisamy orders

அம்மா உணவகங்கள், ஏடிஎம் போன்றவை வழக்கம் போல் செயல்படும். கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் விதிமுறைகளின் படி செயல்படும். அதேபோல் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் மட்டும் அனுமதிக்கப்படும்.உணவகங்களில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.ஐ.டி. நிறுவன பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம். பிற தனியார் நிறுவனங்கள் செயல்படாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios