மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக மேற்கொள்ள வேண்டு என  டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழக அரசு அலுவலகங்களில், தற்காலிக ஊழியர்களாக 8 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகள், நீண்ட நாட்களாகப் பணி நிரந்தரம் கோரி போராடி வருகிறார்கள்.

கடவுளின் குழந்தைகளான அவர்களிடமும் ஆதாயமடைவது பற்றி ஆட்சியாளர்கள் யோசிக்காமல், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதைக் கடமையாகக் கருத வேண்டும். மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.