From the India Gate: 2024ல் வாரிசு தான் தலைமையே.. டெல்லிக்கு ரூட் போட்ட கார் கட்சி !!
இந்திய கேட்டில் இருந்து... அதிகாரத்தின் திரைமறைவுகளில் நிறைய விஷயங்கள் நடக்கும். கருத்துகள், சதிகள், அதிகார சித்து விளையாட்டுக்கள், அரசியல் அதிகாரத்தை பங்கிடுவதில் சண்டைகள் என்று ஏராளமாக தினமும் நடந்து வருகிறது. ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. . இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இதோ உங்களுக்கான இரண்டாவது எபிசோட்.
குறிவைக்கப்பட்ட 2 கேபினட் பதவி:
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இந்த வார இறுதியில் முடிவடையவுள்ள நிலையில், மீண்டும் அமைச்சரவை மாற்றம் குறித்த பேச்சுக்கள் வலுத்து வருகின்றன. குறைந்தது இரண்டு கேபினட் பெரியவர்கள் வெளியேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. வெல்ல முடியாத முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்கொள்வதற்கு ஒருவர் டெல்லியில் ஒரு கட்சி முகமாக சொன்னாலும், அந்த முக்கிய ஒருவருக்கான கதவு வெளிப்படையாக திறந்து இருக்கிறது. காத்திருப்போம் !!
பிசிசிஐயும், கத்தார் கால்பந்து போட்டியும்:
அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் இடையேயான உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிக்கு உலகம் முழுவதும் பல்வேறு முக்கிய நபர்களை கலந்து கொண்டார்கள். ஆனால், அது செய்தியல்ல. பிசிசிஐயின் முழு உயர் அதிகாரிகளும் கத்தாரின் தோஹாவில் இருந்தனர். மிகப்பெரிய விளையாட்டை ரசிக்க அவர்கள் அங்கு போகவில்லையாம்.
பிசிசிஐ குழு, உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு பார்வையாளர்கள் முதல் பிற நாட்டு தலைவர்கள் எவ்வாறு கையாளப்படுகிறார்கள் என்ற பலவற்றையும் கண்காணிக்க சென்றார்களாம். இந்த விளையாட்டிற்கு முன்னும், பின்னும் நடத்தப்படும் கொண்டாட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தி, நிகழ்ச்சி எவ்வாறு ஒருங்கிணைக்கப்படுகிறது, வசதிகள் தேவை என்பதைப் புரிந்துகொள்ள நேரம் செலவிடப்பட்டதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க..உலகத்திலேயே இணையக்கூடாத பிறவி எடப்பாடி தான்.. ஓங்கி அடித்த ஓபிஎஸ் !!
பட்டத்து இளவரசர்:
பட்டத்து இளவரசர் ஒருவர் எந்த ஆரவாரமின்றி தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். உங்களுக்கு தெரியுமா ?. கோட்டையில் உள்ள ராஜா, அவரது வாரிசை மந்திரி ஆக்கிய உடனே மகனுக்கு அதிக பொறுப்புகள் ஒப்படைக்கப்படுகிறதா ? என்பதை ஆய்வு செய்தார். வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியை வழிநடத்தும் தலைவராக அவரைக் காட்டுவதற்கான உத்தியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
விரைவில் அவரது மகனை துணை முதல்வராக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் மாநில நிதியமைச்சர் பால் விலை மற்றும் மின்சார கட்டணத்தை உயர்த்த விரும்பினார். இந்த பரிந்துரையை ஏற்க முதல்வர் தயக்கம் காட்டினாலும், வாரிசிடம் அனுமதி பெற்று தான் அரசின் அறிவிப்பு வெளியானதாம்.
இதையும் படிங்க..டூ ஆர் டை தேர்தல்..! திமுகவிற்கு முடிவுரை..! தமிழகத்தில் 25 எம்பிக்களை பெறுவதே இலக்கு - அண்ணாமலை உறுதி
நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை:
தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி, இப்போது பாரத ராஷ்டிர சமிதி. முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தனது அரசியல் லட்சியத்தின் சிறகுகளை நாடு முழுவதும் பரப்புவது வருகிறார். ஆனால் அது வெளிப்படையான நடவடிக்கை இல்லை போல. நேரடியாக டெல்லி செல்ல சரியான திட்டத்துடன் இருக்கும் கே.சி.ஆர், ஆந்திரப் பிரதேசத்தில் தனது பயணத்தை தொடங்கிவிட்டார்.
விஜயவாடாவில் புதிய பாரத ராஷ்டிர சமிதி அலுவலகம் திறக்கப்பட்டது தான் அந்த நடவடிக்கை. கே.சி.ஆருடன் சவாரி செய்ய மாறக்கூடிய வாய்ப்புள்ள தலைவர்களின் பெயர்களை டிக் செய்வதில் அரசியலை உற்றுநோக்கி கொண்டே இருப்பவர்கள் மும்முரமாக உள்ளனர்.
இரண்டு முறை காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த வுண்டவல்லி அருண் குமார், பி.ஆர்.எஸ் கட்சியில் இணைந்த முதல் முக்கிய அரசியல் பிரமுகராகத் தெரிகிறது. கே.சி.ஆரின் எதிர்ப்பாளராக அறியப்பட்ட இவர், மாநிலப் பிரிவினையை கடுமையாக எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் அவர் கே.சி.ஆரை நீண்ட நேரம் சந்தித்து பேசியது இரு மாநிலங்களிலும் வதந்திகளை கிளப்பியுள்ளது. வுண்டவல்லி, முன்னாள் முதல்வரும், தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகனின் தந்தையுமான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் நெருங்கிய உதவியாளராவார். அவர்கள் சொல்வது போல் அரசியலில் நிரந்தர நண்பர்களோ எதிரிகளோ இல்லை தான் என்பது நினைவுக்கு வருகிறது.
இதையும் படிங்க..ஸ்டாலின் சொத்து பட்டியல் ரெடி! 13 அமைச்சர்களின் சொத்து மதிப்பு 2 லட்சம் கோடி.. பீதியை கிளப்பும் அண்ணாமலை!