1400 நோய்களுக்கு 5 லட்சம் ரூபாய் இலவச சிகிச்சைக்கான ஆயுஷ் மான் பாரத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொண்ட நிர்மலா சீதாராமன், செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’பிரதமரின் மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் அனைத்து சிகிச்சைகளியும் பெறலாம். ஏழைகளுக்கும் மருத்துவ சிகிச்சைகள் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆயூஷ்மான் காப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆயுஷ் மான் பாரத் திட்டத்தின் கீழ் 1400 விதமான நோய்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சி அளிக்கப்படுகிறது. இலவசமாகவும் எவ்வித ஆவணங்கள் இன்றியும் ஆயுஷ் மான் பாரத் திட்டம் செயல்பட்டு வருகிறது’’ என அவர் தெரிவித்தார்.