Asianet News TamilAsianet News Tamil

விவசாயிகளுக்கு கைகொடுக்கும் நிறுவனம்... இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் மக்களே..!

கொரோனா தொற்று காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் டஃபே நிறுவனம் சார்பில் குறு விவசாயிகளுக்கு இலவசமாக டிராக்டர் சேவை வழங்கப்படுகிறது.
 

Free tractor service on behalf of Duffy to help farmers!
Author
India, First Published May 25, 2021, 1:30 PM IST

கொரோனா தொற்று காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் டஃபே நிறுவனம் சார்பில் குறு விவசாயிகளுக்கு இலவசமாக டிராக்டர் சேவை வழங்கப்படுகிறது.

டஃபே டிராக்டர் நிறுவனம் உலகிலேயே மூன்றாவது பெரிய டிராக்டர் நிறுவனமாகத் திகழ்கிறது. கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தின் மத்தியில் இந்நிறுவனம் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகிறது. அந்த வகையில் இரண்டு ஏக்கர், அதற்கும் கீழ் நிலம் உள்ள குறு விவசாயிகளுக்கு, தங்களது வாடகை டிராக்டர் சேவையை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த இலவச டிராக்டர் சேவை மூலம் 50 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Free tractor service on behalf of Duffy to help farmers!

இந்தத் திட்டத்திற்காக டஃபே நிறுவனம் 16,500 மாசே ஃபேர்குஷன் டிராக்டர்களை வழங்குவதாகவும், 28,800 கருவிகளை வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மே, ஜூன் மாதங்களில் விவசாயிகள் டிராக்டர் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தமிழ்நாடு அரசின் உழவன் செயலி மூலமாகவும், டஃபே நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைத்தும் இந்த சேவையைப் பெறலாம்.

Free tractor service on behalf of Duffy to help farmers!

கொரோனா தொற்று காலத்தில் டஃபே நிறுவனம் சார்பில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்துவதற்கும் இந்நிறுவனம் உதவி வருவதாகக் கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை எதிர்கொள்ள இந்நிறுவனம் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு 15 கோடி ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios