Asianet News TamilAsianet News Tamil

இலவச லேப்டாப் மெர்சல் பார்க்க அல்ல - தம்பிதுரை: அப்ப எம்ஜிஆர்., நூற்றாண்டு விழா லைவ் பாக்கவா... நெட்டிசன்ஸ் ‘மரண கலாய்’!

free laptops is not meant for watching mercel movie or bigboss program says thambidurai
free laptops is not meant for watching mercel movie or bigboss program says thambidurai
Author
First Published Nov 11, 2017, 10:48 AM IST


ஜெயலலிதா இருந்தபோதான தமிழக அரசின் மாணவர்களுக்கான சமூக திட்டங்களில், பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்பும், இலவச சைக்கிள்களும் வழங்கப்பட்டவை பெரும் ஆதரவைப் பெற்றவை. 

இப்போது அந்த விலையில்லா சைக்கிள்களுக்கான டெண்டர், இருப்பு போன்றவற்றில் பிரச்னை இருப்பதால், சைக்கிள்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தம்பித்துரை எம்.பி. கூறிய ஒரு கருத்து இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.  ஒவ்வொரு வருடமும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவது மெர்சல்' படம் பார்ப்பதற்கும், பிக்பாஸ் நிகழ்ச்சியை காண்பதற்கும் அல்ல என்று அவர் காட்டமாக தெரிவித்திருந்தார். 

செய்தியாளர்களைச் சந்தித்த தம்பிதுரை எம்பி, 'மெர்சல், பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்க இலவச மடிக்கணினி மாணவர்களுக்கு தரப்படவில்லை. அரசு வழங்கும் இலவச மடிக்கணினியை மாணவர்கள் சரியான வையில் பயன்படுத்த வேண்டும்' என்று கூறியிருந்தார்.
 
தம்பிதுரையின் இந்தக் கருத்து இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலரும் பேஸ்புக், டிவிட்டர்களில் தங்கள் மரண கலாய்த்தலை தொடர்ந்து வருகின்றனர்.  'அதிமுகவுக்கு ஓட்டு போட்டது கூவத்தூர் சென்று கும்மி அடிக்க அல்ல' என்றார் ஒருவர்.  அது சரிங்க.. 'அப்ப எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நேரடி ஒளிபரப்பு பாக்கலாமா? என்கிறார் ஒருவர்.

இதை விட ஒருவர் போட்ட இன்னொரு கருத்துதான் ஹைலைட்...! நாங்களும் உங்கள் அரசாங்கத்திற்கு ஓட்டு போட்டது தமிழ் நாட்டை நல்வழியில் நடத்துவதற்கே தமிழ் நாட்டை கேவலப்படுத்துவதற்கு அல்ல' என்று கூறியுள்ளார் ஒருவர். 

ஏதோ ஒரு விதத்தில் கருத்து சொல்லப் போக, அது வேறு ஏதோ வடிவத்தில் போய்ச் சேருவதுதான், இன்றைய ட்ரெண்ட்!

Follow Us:
Download App:
  • android
  • ios