கொரோனா தொற்று காரணமாக வழிபாட்டு தளங்கள் 5மாதங்கள் மூடப்பட்டு இருந்தன.சில நாட்களாகத்தான் வழிபாட்டு ஆலயங்கள் திறக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள் மூடங்கியிருந்த மக்கள் வழிபாட்டிற்காக கோயில்களுக்கு படையெடுத்து வருகிறார்கள். திருச்செந்தூர் போன்ற கோயில்களில் ஆன் லைன் முன் பதிவு செய்திருந்தால் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் பணி தொடங்கியுள்ளது.இது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இலவச லட்டு வழங்கும் திட்டம் நவம்பர் 8 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்..

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, சராசரியாக நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு கடந்த தீபாவளி அன்று, மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு பிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது.