அந்நாடு முழுக்க முழுக்க வருவாய்க்கு சுற்றுலாத்துறையையே நம்பியுள்ளது. ஆனால் கொரோனா மற்றும் அதைத் தொடர்ந்து வந்த ஊரடங்கு காரணமாக சுற்றுலாத்துறை முற்றிலுமாக முடங்கியுள்ளது. 

தற்போது பல்வேறு மாநிலங்களில் வழங்கப்பட்டு வரும் இலவச திட்டங்களால் இலங்கையைப் போன்றே இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என அதிகாரிகள் பிரதமரிடம் கவலை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான இலவசத் திட்டங்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை அழிவை நோக்கி கொண்டு செல்கிறது என்றும் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் பசி பஞ்சத்தால் கதறி வருகின்றனர். குழந்தைகளுக்கு பால் பிஸ்கட் கூட இல்லாத நிலைக்கு அந்நாடு தள்ளப்பட்டுள்ளது. அந்நாட்டின் கரன்சி மதிப்பு அதல பாதாளத்தில் விழுந்துள்ளதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டு மக்களின் அடிப்படை தேவைகள் கூட கிடைக்காத நிலை உள்ளது. அதற்காக கடை வாசலில் பல மணி நேரம் காத்திருந்து பொருட்களை வாங்க வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். எரிபொருள், மருந்து போன்ற அடிப்படை பொருட்களை வாங்குவதற்கு கூட மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

பெரும்பாலான கடைகளில் பொருட்கள் இன்றி காலியாகவே உள்ளது. கையில் பணம் இருந்தாலும் மக்கள் வெறுங்கையோடு வெளியே வரும் அவலநிலை உள்ளது. காய்கறி பன்மடங்கு விலை அதிகரித்துள்ளது. கோதுமை, அரிசி உள்ளிட்ட பொருட்கள் பன்மடங்கு விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பால் பவுடர் ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மக்கள் நடு ரோட்டில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டு அரசு இந்தியாவிடம் கையேந்தி வருகிறது. ராஜபக்சே அரசில் உணவுக்கு தட்டுப்பாடு, தொடர் மின்வெட்டு, விலைவாசி உயர்வு என மக்கள் சொல்லோணாத்துயரை அனுபவித்து வருகின்றனர். அதேபோல அந்நாடு முழுக்க முழுக்க வருவாய்க்கு சுற்றுலாத்துறையையே நம்பியுள்ளது. ஆனால் கொரோனா மற்றும் அதைத் தொடர்ந்து வந்த ஊரடங்கு காரணமாக சுற்றுலாத்துறை முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனால் காய்கறி, ரோட்டில் விலை 3 ,4 மடங்கு வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இலங்கை சந்திக்கும் பொருளாதார நெருக்கடியை விட பெரிய நெருக்கடியை விரைவில் இந்தியா சந்திக்கும் என்றும் பலரும் எச்சரித்து வருகின்றனர். 

இது நாட்டு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இலங்கையைப் போன்று இந்தியாவின் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடுமா என பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிகாரிகள் சந்திப்பின் போது கேள்வி எழுப்பப்பட்டது. கூட்டத்தில் மாநிலங்களில் நடைமுறைக்கு சாத்தியமற்ற மற்றும் கவர்ச்சிகர திட்டங்கள் குறித்து மூத்த அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். அதாவது மாநிலங்களின் பல திட்டங்கள் பொருளாதார ரீதியாக இலாபகரமானவை அல்ல என்றும், அவை இந்தியாவின் பொருளாதாரத்தை அதல பாதாளத்தை நோக்கி இட்டுச்செல்லும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த கருத்து அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமரின் முதன்மைச் செயலாளர் என்எஸ்ஏ அஜித் தோவல், பி.கே மிஸ்ரா, கேபினெட் செயலாளர் ராஜு கௌபா மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.