Asianet News TamilAsianet News Tamil

எதையும் கண்டுபிடிக்கவில்லை..! எதையும் கைப்பற்றவில்லை..! தேடலின் நேரம் சுவாரஸ்யமானது - ப.சிதம்பரம் கிண்டல்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் தொடர்புடைய வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தி வரும் நிலையில், சோதனையில் எந்த ஆவணங்களையும் சிபிஐ கைப்பற்றப்படவில்லையென ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
 

Former Union Minister P  Chidambaram has said that nothing was seized from his house during the CBI raid
Author
India, First Published May 17, 2022, 1:11 PM IST

ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை

 முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட 9 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் கார்த்தி சிதம்பரம், மீது உள்ள நிலையில் தற்போது "சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான 9 இடங்களில் காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Former Union Minister P  Chidambaram has said that nothing was seized from his house during the CBI raid

ஆவணங்கள் கைப்பற்றவில்லை

இந்த சோதனை தொடர்பாக கருத்து தெரிவித்த கார்த்தி சிதம்பரம், எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள். இதுவரை எத்தனை முறை சோதனை நடந்தது என்பதை நானே மறந்துவிட்டேன்" என கார்த்தி சிதம்பரம் ட்வீட் செய்திருந்தார். இதனையடுத்து தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப,சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் இன்று காலை சென்னையில் உள்ள எனது இல்லத்திலும், டெல்லியில் உள்ள எனது அதிகாரப்பூர்வ இல்லத்திலும் சிபிஐ குழுவினர் சோதனை நடத்தினர். சிபிஐ குழு எனக்கு ஒரு எஃப்ஐஆர் காட்டியது, அதில் நான் குற்றம் சாட்டப்பட்டவனாக குறிப்பிடப்படவில்லை என தெரிவித்துள்ளார். மேலும்  தேடுதல் குழு எதுவும் இதுவரை எதையும் கண்டுபிடிக்கவு்ப இல்லை  கைப்பற்றவும் இல்லையென தெரிவித்துள்ளார்.  மேலும் தேடலின் நேரம் சுவாரஸ்யமானது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்பவுதாகவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios