ஓபிஎஸ் அணிக்கு திரும்பும் நிர்வாகிகள்..? பொதுக்குழுவில் நடைபெற்ற பிரச்சனைக்கு யார் காரணம்- வைத்தியலிங்கம்
அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் போது, பொதுக்குழு உறுப்பினர் அல்லாத 600 பேர்தான் பிரச்சனை செய்ததாக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.
ஓபிஎஸ் பதவி காலாவதியாகிவிட்டது
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களும் நிராகரிப்பதாக தெரிவிக்கபட்டது. மேலும் ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்ததும் ஓபிஎஸ்சை அதிர்ச்சி அடைய செய்தது. இதனையடுத்து கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியே சென்ற ஓபிஎஸ் மீது ஒரு சிலர் தண்ணீர் பாட்டிலை வீசினர். இதனால் அந்த இடமே பரபரப்பானது. இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அதிமுக பொதுக்குழு சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெறவில்லையென்றும், நீதிமன்ற உத்தரவிற்கு மாறாக நடைபெற்றதாக கூறப்பட்டது. இதனையடுத்து ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாத காரணத்தால் அவர் பதவி காலாவதியாகிவிட்டதாகவும் கூறப்பட்டது.
திமுகவிற்கு இலவச சட்ட ஆலோசனை தருபவர் கி.வீரமணி..! திராவிடர் கழகத்தை நக்கல் செய்த வி.பி.துரைசாமி
பொதுக்குழுவில் சம்பந்தம் இல்லாத நபர்கள்
இந்தநிலையில் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களை இபிஎஸ் அணியினர் மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று ஓபிஎஸ்சை சந்தித்த நிர்வாகிகள் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம், பொதுக்குழு பிறகு ஓபிஎஸ் செல்வாக்கு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. பொதுக்குழு கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக காலை 6 மணிக்கே 600க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அல்லாதவர்களை கூட்ட அரங்கில் முன் வரிசையில் உட்கார வைத்ததாக தெரிவித்தார். முன் வரிசையில் அமர்ந்த உறுப்பினர்கள் அல்லாதவர்கள் தான் கூச்சலிட்டதாக தெரிவித்தார், பொதுக்குழு உறுப்பினர்கள் யாரும் பேசவில்லை ஜனநாயகத்திற்கு புறம்பாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதனை கூறிவிட்டு தான் வெளியே சென்றதாக தெரிவித்தார். இபிஎஸ் அணிக்கு ஆதரவாக சென்ற செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மீண்டும் திரும்பி வருவதாக கூறினார். ஜூலை 11 ஆம் தேதி அறிவித்துள்ள பொதுக்குழு கூட்டம் நடைபெறாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்