Asianet News TamilAsianet News Tamil

ஆட்டத்தை ஆரம்பித்த முதல்வர் ஸ்டாலின்.. எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 52 இடங்களில் அதிரடி சோதனை..!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வரும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

former minister SP Velumani Anti Corruption Raid
Author
Coimbatore, First Published Aug 10, 2021, 8:57 AM IST

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வரும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. அதுவும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசில் எஸ்.பி.வேலுமணி தான் நம்பர் 2ஆக இருந்தார். இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக புகார் கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

former minister SP Velumani Anti Corruption Raid

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரகுநாத் மற்றும் திருவேங்கடம் என்பவர் எஸ்பி வேலுமணி சுமார் 1500 கோடி ரூபாய் அளவிற்கு ஒப்பந்த முறைகேடு செய்துள்ளதாகவும்,  அந்த புகாருக்கு அவர் ஆதாரமாக பல்வேறு ஆவணங்களையும் போலீசாரிடம் நேற்று சமர்பிக்கப்பட்டது.

former minister SP Velumani Anti Corruption Raid

இந்நிலையில், இந்த புகாரின் அடிப்படையில் வேலுமணி தொடர்புடைய 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை, குனியமுத்தூர் சுகுணாபுரம் பகுதியில் வசிக்கும் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடு, மதுக்கரை மார்க்கெட் பகுதியில் வசிக்கும் வேலுமணி மனைவியின் சகோதரர் சண்முகராஜா வீடு, சென்னையில் 15 இடங்களிலும், காஞ்சிபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட 52 இடங்களில்  சோதனை நடத்தி வருகின்றனர்.  முன்னதாக திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் விசாரிக்கப்பட்டு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios