தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட மணிகண்டன் துணை முதல்வரை சந்தித்து குறைகளை கொட்டித்தீர்த்த சம்பவம் தற்போது  ஹாட்  டாக்காக மாறி உள்ளது...

சொந்த கட்சிகாரர்களையே தொகுதிக்குள் நுழையவிடாமல் ஆதிக்கம் காட்டுகிறார், யாரிடம் வேண்டுமானாலும் போய் சொல்லுங்கள் எனக்கு கவலை இல்லை என்று  கெத்துகாட்டி அஞ்சா நெஞ்சன் என்று  பெயரெடுத்த  மாண்புமிகு அமைச்சராக இருந்த மணிகண்டனின் பதவி பறிக்கப்பட்டு இரண்டு தினங்கள் ஆகிவிட்டது.

முதல் முறையாக பதவி பறிப்பில் இறங்கி தன்னாலும் ஜெயலலிதாவைப்போல் அதிரடி காட்ட முடியும் என்பதை எடுத்துகூறியுள்ளார் முதலமைச்சர் பழனிச்சாமி . ஏற்கனவே சட்டமன்ற உறுபினர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையில் எதற்காக இந்த பலபரீட்சை என்று ஆலோசனை கூறியவர்களிடம் , கட்சியை காட்டிக்கொடுப்பவர்கள் போனால் போகட்டும், அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை என்று  உறுதிபட பேசிவிட்டாராம் முதலமைச்சர் பழனிச்சாமி. மத்திய அரசின் ஆதரவு முதல்வருக்கு உள்ளதால் தற்போதைக்கு எதைசெய்தாலும் அது பேக்பயர் ஆகிவிடும் என்று  நெருக்கமான நண்பர்கள்  மணிகண்டனுக்கு ஆலோசனை கூற, அடக்கி வாசிக்க முடிவு செய்துள்ளார் மணிகண்டன் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் நேற்று காலை செய்தியாளர்களை சந்தித்த மணிகண்டன் முதலமைச்சரைச் சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார், பின்னர் நேற்று பிற்பகல் மதுரையிலிருந்து சென்னை வந்த அவர் துணை முதலமைச்சரை சந்தித்து சுமார் அரைமணி நேரம் தன் மனக்குமுறல்களை கொட்டி தீர்த்துள்ளார். அனைத்தையும் நிதானமாக கேட்டுக்கொண்ட துணை முதலமைச்சர் அவருக்கு பதில் ஏதும் சொல்லாமல் சைலண்ட் மோடில் இருந்ததால் அப்செட் ஆகிஉள்ளார் மணிகண்டன். தேடி வந்ததற்கு தனக்கு இதுவும் தேவை இன்னமும் தேவை என்று புலம்பிய படி அவர் அங்கிருந்து வெளியேறிதாக கூறப்படுகிறது.