Asianet News TamilAsianet News Tamil

எம்.ஜி.ஆர். போட்ட பிச்சையில் ஆட்சிக்கு வந்தவர்கள் திமுகவினர் - முன்னாள் அமைச்சர் வீரமணி பரபரப்பு பேச்சு

எம்ஜிஆர் போட்ட பிச்சையில்ஆட்சிக்கு வந்தவர்கள் திமுகவினர் என திருப்பத்தூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி பேசினார்.

former minister kc veeramani slams dmk party in tirupattur district vel
Author
First Published Feb 2, 2024, 10:47 AM IST

பட்டிலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூர தாக்குதல் நடத்திய பல்லாவரம் திமுக எம்எல்ஏவின் மகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஸ்டேட் வங்கி எதிரில் முன்னாள் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சரும், மாவட்ட  செயலாளருமான கே.சி.வீரமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது கண்டன உரை ஆற்றிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி எதிர்கட்சியாக திமுக இருந்த போது கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க? வடிவேல் சொல்வதை போல் அப்போது நல்ல வாய், ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நாற வாய் போல தேர்தலின் போது கொடுத்த 520 வாக்குறுதிகளை ஒன்றை கூட ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் திட்டங்களை எடப்பாடியார் சொல்கிறார். ஸ்டாலின் செய்கிறார். ரஜனிகாந்தின் அருணாசலம் படம் போல ஆண்டவன் சொல்றான், அருணாசலம் செய்கிறான் போல என பேசினார். 

காட்டு யானையுடன் செல்பி; சுற்றுலா பயணியை தலைதெறிக்க ஓடவிட்ட ஒற்றை யானை - கேரளாவில் பரபரப்பு

மேலும் எம்ஜிஆர் போட்ட பிச்சையில் ஆட்சிக்கு வந்தவர்கள் நீங்கள். கருணாநிதி எப்படி ஆட்சிக்கு வந்தார்? யார் மூலமாக ஆட்சியைப் பிடித்தீர்கள்? கருணாநிதி புரட்சியாளர் எம்ஜிஆரிடம் கெஞ்சனாறு. எப்படியாவது என்னை ஒரு முறை முதலமைச்சர் ஆக்குங்கள் என கெஞ்சியதின் பெயரில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்  கருணாநிதியை முதல்வர் ஆக்கினார்.

திமுக கூட்டணியில் 2 தொகுதிகளை கேட்கும் மநீம..! எந்த எந்த தொகுதி தெரியுமா.? கமல் போட்டியிடும் தொகுதி எது.?      

திமுக என்ற கட்சி நிலைத்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பாடல் பாடி திமுகவை வளர்த்தார். நீங்களா வளர்த்தீங்க? இல்ல உங்கள் தலைவர் கருணாநிதி வளர்த்தாரா? அண்ணாவை ஆட்சியில் அமரவைத்து அழகு பார்த்ததும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்தான் என கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசினார். உடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி பொறுப்பாளர்கள் என 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios