திமுக கூட்டணியில் 2 தொகுதிகளை கேட்கும் மநீம..! எந்த எந்த தொகுதி தெரியுமா.? கமல் போட்டியிடும் தொகுதி எது.?
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியோடு இணைந்து போட்டியிட மக்கள் நீதி மய்யம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் அந்த கட்சிக்கு இரண்டு தொகுதியை கேட்பதாக கூறப்படுகிறது.
சூடு பிடிக்கும் தேர்தல் களம்
நாடாளுமன்ற தேர்தல் தேதி இந்த மாதம் இறுதியில் அறிவிக்கப்படவுள்ளது. இதனையடுத்து அடுத்த இரண்டு மாதங்கள் நாடு முழுவதும் தேர்தல் திருவிழா நடைபெறவுள்ளது. இதனையொட்டி 3வது முறையாக ஆட்சியை தக்கவைக்க பாஜக ஏற்கனவே களத்தில் இறங்கி தேர்தல் பணியை தொடங்கியுள்ளது. இதே போல காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் தேர்தல் பணியை தீவிரம் காட்டி வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தை பொறுத்தவரை 4 முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என போட்டி இருக்கும் என தற்போது நிலையில் தெரிகிறது.
எங்களுக்கு அதிகாரம் இல்லை என்ற முதல்வர் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது
திமுக கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள்.?
இந்தநிலையில் தேர்தல் பணிக்காக திமுக மற்றும் அதிமுக குழுக்களை அறிவித்து பணியையும் தொடங்கிவிட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. எனவே இந்த கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அந்த கட்சியோடு ரகசிய பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியை பொறுத்தவைர காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்கள் ஒதுக்கப்படும் என தெரிகிறது. கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிக்கு 2 இடங்களும், முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்படவுள்ளது. எனவே மக்கள் நீதி மய்யத்திற்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் கமல் கட்சி.?
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தென்சென்னை மற்றும் கோவை தொகுதி ஒதுக்கப்பட இருப்பதாக தெரிகிறது. இந்த இரண்டு தொகுதியில் ஒரு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியோடு முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் அடுத்தாக மற்ற கூட்டணி கட்சிகளோடு நாளை மற்றும் நளை மறுதினம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.எனவே திமுகவுடன் கூட்டணி என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் விரைவில் வெளியிட இருப்பதாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்