Asianet News TamilAsianet News Tamil

மலைக்க வைக்கும் நகைகள்.. 9 சொகுசு கார்கள்.. கே.சி.வீரமணி வீட்டில் கிடைத்த பொருட்கள் என்னென்ன தெரியுமா?

அதிமுக ஆட்சியில் வணிகவரித் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி. வீரமணி. இவர் 2011 முதல் 2021ம் ஆண்டு வரை ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. 2011ம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு 7 கோடியாக இருந்த நிலையில் பின்னர் 90 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. 

Former Minister KC Veeramani raid.. cash, luxury cars seized
Author
Tamil Nadu, First Published Sep 17, 2021, 11:10 AM IST

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடு உள்ளிட்ட 35 இடங்களில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள், நகைகள், வைர நகைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதிமுக ஆட்சியில் வணிகவரித் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி. வீரமணி. இவர் 2011 முதல் 2021ம் ஆண்டு வரை ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. 2011ம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு 7 கோடியாக இருந்த நிலையில் பின்னர் 90 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. 

Former Minister KC Veeramani raid.. cash, luxury cars seized

இதையடுத்து அவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 90 கோடி அளவுக்கு சொத்துகளை வாங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அறப்போர் இயக்கத்தின் புகாரின் பேரில் அவரது வீடு, உறவடினர்கள் வீடு, ஹோட்டல் ஹில்ஸ் உள்ளிட்ட 35 இடங்களில்  நேற்று காலை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், பணம், நகை, கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Former Minister KC Veeramani raid.. cash, luxury cars seized

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் விவரம்;-

இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 34.01 லட்ச ரூபாய் பணம், ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அன்னியச் செலாவணி டாலர், 4,987 கிலோ மதிப்பில் 623 சவரன் தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளி, வங்கிக் கணக்கு மற்றும் புத்தகங்கள் முக்கிய ஆவணங்கள், ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 9 சொகுசு கார்கள், கணினிகளின் ஹார்ட் டிஸ்க்குகள், சொத்துக்கள் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் 30 லட்ச ரூபாய் மதிப்பில் 275 யூனிட் மணலை தனது வீட்டில் அமைச்சர் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios