திமுக மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய அண்ணாமலை..! கெத்து காட்டும் பாஜக
திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆயக்குடி தா. பூவேந்தன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.
திமுக- பாஜக மோதல்
தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவிற்கு பாஜக கடும் போட்டியாக அமைந்துள்ளது. திமுக அரசு செயல்பாடுகளை அதிமுக விமர்சிப்பதை விட பாஜக தான் அதிக அளவு விமர்சித்து வருகிறது. அரசின் திட்டங்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் கையில் எடுத்து உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் எதிர்கட்சி அதிமுகவா.? அல்லது பாஜகவா.? என்ற கேள்வு எழுந்து வருகிறது. அதே நேரத்தில் திமுகவும் பாஜகவிற்கு சரியான பதிலடி கொடுத்து வருகிறது.
பொய்யான தகவலை பரப்புவதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆளுங் கட்சியாக திமுக உள்ள நிலையில், அந்த கட்சியில் இணையவே எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் விரும்புவார்கள். ஆனால் தற்போது திமுக மாஜி எம்எல்ஏ ஒருவர் பாஜகவில் இணைந்திருப்பது திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பாஜகவில் இணைந்த திமுக மாஜி எல்எல்ஏ
1996 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பழனி தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட பூவேந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சட்டமன்ற உறுப்பினராக 5 ஆண்டுகள் செயல்பட்டார். இந்தநிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பதிவில் பழநி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அண்ணன் திரு ஆயக்குடி தா. பூவேந்தன் அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியாலும், தலைமைப் பண்புகளாலும் ஈர்க்கப்பட்டு, திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் அண்ணன் திரு பழனி கனகராஜ் முன்னிலையில், கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் என தெரிவித்துள்ளார். மேலும் அண்ணன் பூவேந்தன் அவர்களை மனமார வரவேற்று மகிழ்கிறோம். அவரது வருகை, தமிழக பாஜகவிற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
"எங்கள் சாவுக்கு சீமான் தான் காரணம்.. இதுதான் என் கடைசி வீடியோ"- விஜயலட்சுமி பரபரப்பு தகவல்