திமுக முன்னாள் அமைச்சரை தட்டித்தூக்கிய எடப்பாடியார்... ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த அதிமுக..!
தருமபுரியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் அதிமுகவில் இணைந்தார்.
தருமபுரியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் அதிமுகவில் இணைந்தார்.
திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனை 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். இதையடுத்து முல்லைவேந்தன் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதையடுத்து கட்சி பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்து வந்தார். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தனது சூதரவாளர்களுடன் முல்லைவேந்தன் அதிமுகவில் இணைந்தார். முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனின் இணைப்பு அதிமுக கூட்டணிக்கு கூடுதல் பலம் என்றே கூறப்படுகிறது.
இதனையடுத்து, அதிமுக இணைப்பு விழாவில் பேசிய முதல்வர், தருமபுரி மாவட்டத்தில் முல்லைவேந்தன் தனக்கென ஒரு தனி செல்வாக்கை பெற்றிருக்கிறார். கிராமம் நல்லா இருக்க வேண்டும் என நினைப்பவர். நீர் பாசன திட்டம் வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என எண்ணிடத்தில் மனு கொடுத்தார்.
எங்கள் ஆட்சியில் விவசாயத்திற்கும், விவசாய பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதை நிறைவேற்றியுள்ளோம். தற்போது முல்லைவேந்தன், கட்சியில் இணைந்திருப்பது இயக்கத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். அவர் இந்த இயக்கத்தில் இணைந்ததால், மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அவருக்கு என எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.