Asianet News TamilAsianet News Tamil

கந்தசாமியால் கதறும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. வசமாக சிக்குகிறாரா எஸ்.பி.வேலுமணி?

தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சியமைந்ததும் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் விசாரிக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார். குறிப்பா கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்யும் போது வேலுமணி கடுமையாக விமர்சித்து நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

former AIADMK minister velumani home Important documents are stuck
Author
Tamil Nadu, First Published Aug 10, 2021, 10:37 AM IST

தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சியமைந்ததும் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் விசாரிக்கப்படும் என்று ஸ்டாலின் கூறிய நிலையில் தற்போது எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட  52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது அதிமுக அமைச்சர்கள் மீது திமுக, அறப்போர் இயக்கம் உள்ளிட்ட பலர் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த புகார்கள் மீது அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சில புகார்கள் மட்டுமே விசாரிக்கப்பட்டன. சில ஊழல் புகார்கள் நீதிமன்றம் வரை சென்றன. இதேபோல் தேர்தலுக்கு முன்பு தமிழக ஆளுநரிடம் அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுக அமைச்சர்கள் மீது மிகப்பெரிய பட்டியலுடன் ஊழல் புகார்களை திமுக கொடுத்து. அப்போது அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் அதில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

former AIADMK minister velumani home Important documents are stuck

தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சியமைந்ததும் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் விசாரிக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார். குறிப்பா கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்யும் போது வேலுமணி கடுமையாக விமர்சித்து நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்த சூழலில் வேலுமணி மீதான ஊழல் புகார் குறித்து விரிவான விசாரணைக்கு உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. 

former AIADMK minister velumani home Important documents are stuck

இந்நிலையில், ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதுமே லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக கந்தசாமி ஐபிஎஸ் என்ற அதிகாரியை நியமித்தார். இவர் சிபிஐ அதிகாரியாக இருந்த போது குஜராத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையே கைது செய்தவர் என்பதால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. முதலில் எஸ்.பி.வேலுமணி. தங்கமணி உள்ளிட்டோர் மீது வழக்கு போட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தயாராகி வருவதாக கூறப்பட்டது. தற்போது கைவசம் உள்ள ஆதாரங்களை சரிபார்ப்பது, கூடுதல் ஆதாரங்களை திரட்டுவதுமாக இந்த அமைச்சர்களின் மாவட்டங்களில் முகாமிட்டு ஆதாரங்களை திரட்டி வந்தனர். 

former AIADMK minister velumani home Important documents are stuck

இந்நிலையில், எந்த நேரத்திலும் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டவர்கள் வீட்டில் சோதனை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே, அரசு ஒப்பந்த பணிகள் வாங்கி தருவதாக கூறி ரூ. 1.20 கோடி மோசடி செய்து விட்டதாக எஸ்.பி வேலுமணி மீது திருவேங்கடம் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை தனக்கு சாதகமாக பயன்படுத்தி எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்கள் உட்பட 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அதில், சென்னையில் மட்டும், 15 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனையில் முக்கிய ஆதாரங்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து சோதனை நடைபெற்று வரும் நிலையில் எஸ்.பி வேலுமணி, அவரது சகோதரர் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios