திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் அதிமுகவைச் சேர்ந்த கோவை மாநகராட்சி முன்னாள் மேயரும்-மாவட்ட முன்னாள் செயலாளருமான கணபதி ராஜ்குமார் திமுகவில் இணைந்தார். 

கோவை மாநகர் மாவட்ட அதிமுகவைச் சேர்ந்தவர் கணபதி ப.ராஜ்குமார். 25 ஆண்டுகளாக அதிமுக உறுப்பினராக இருந்து வந்த இவர், கடந்த 2011 முதல் 2014 வரை மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவராகவும், 2014 முதல் 2016 வரை, கோவை மாநகராட்சி மேயராகம் பதவி வகித்துள்ளார். மேயராகப் பணியாற்றிய காலகட்டத்தில், அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளராகவும் இவர் இருந்துள்ளார்.

இந்நிலையில். முன்னாள் மேயர் கணபதி ப.ராஜ்குமார், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, எம்.பி., கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் கோவை கார்த்திக் எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.