ராஜூவ் கொலை குற்றவாளிகள் விடுதலை பற்றி விமர்சித்த மாஜி ADSP அனுசுயாவுக்கு கொலை மிரட்டல்! பாஜக சொன்ன பகீர்.!
ராஜிவ் காந்தி அவர்களின் படுகொலையின் போது பாதுகாப்பு பணியில் இருந்தவரும், குற்றவாளிகளை விடுவித்தது குறித்து விமர்சிக்கும் அக் கொலை வழக்கின் முக்கிய சாட்சியுமான முன்னாள் காவல் துறை அதிகாரி அனுசுயா அவர்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன.
ராஜூவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை பற்றி விமர்சித்ததால் அனுசுயாவுக்கு கொலை மிரட்டல் வருவதால் அவருக்கு போலீஸ் உரிய பாதுகாப்பு தரவேண்டும் என தமிழக காவல்துறைக்கு பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையின்போது பாதுகாப்பு பணியில் இருந்த ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி அனுசுயா டெய்சி கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது;- விடுதலையாகி வெளியே வந்த நளினி ஊடகத்துக்கு நிறைய பொய்யான தகவல்களை தெரிவித்து வருகிறார். குண்டுவெடிப்பின்போது, நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் தான் இல்லை என்றும், இந்திராகாந்தி சிலை அருகில் இருந்ததாகவும், நளினியும், சுபாவும் விலை உயர்ந்த மைசூர் சில்க் புடவையில் வந்தனர். ஆனால், நளினி நான் அங்கு இல்லை என்று கூறிவருகிறார்.
இதையும் படிங்க;- நளினி ஒரு துரோகி! பிரதமரை படுகொலை செய்த கொலைகாரி! இனியாவது பொய் பேசாமல் திருந்து.. ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி விளாசல்
விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்துக்குள் வழிகாட்டி, அடைக்கலம் கொடுத்த நளினிதான் முதல் குற்றவாளி. நளினி உதவியின்றி ராஜீவ் காந்தியை கொன்று இருக்க முடியாது. நளினி நம் நாட்டுக்கே ஒரு துரோகி, முன்னாள் பிரதமரை கொன்ற கொலைகாரி. ராஜூவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், குற்றவாளிகள் விடுதலை பற்றி விமர்சித்த அனுசுயாவுக்கு கொலை மிரட்டல் வருவதால் அவருக்கு போலீஸ் உரிய பாதுகாப்பு தரவேண்டும் என தமிழக காவல்துறைக்கு நாராயணன் திருப்பதி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- ராஜிவ் காந்தி அவர்களின் படுகொலையின் போது பாதுகாப்பு பணியில் இருந்தவரும், குற்றவாளிகளை விடுவித்தது குறித்து விமர்சிக்கும் அக் கொலை வழக்கின் முக்கிய சாட்சியுமான முன்னாள் காவல் துறை அதிகாரி அனுசுயா அவர்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன என்று கூறியுள்ள நிலையில், கொலை மிரட்டல் விடும் 'காலிகளை' கண்டுபிடித்த கைது செய்ய வேண்டியது தமிழக காவல் துறையின் கடமை மற்றும் பொறுப்பு.
முன்னாள் பிரதமரை கொன்ற கொலைகார கூட்டத்தின் ஆதரவாளர்கள் இன்னும் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதையே இது உணர்த்துகிறது. ஆகவே, அனுசுயா அவர்களுக்கு காவல் துறை உரிய பாதுகாப்பை உறுதி செய்வதோடு, ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு காரணமான, தடை செய்யபட்டுள்ள விடுதலை புலிகள் இயக்கத்தினருடன் சமீபத்தில் விடுவிக்கப்பட்ட ஏழு குற்றவாளிகள் இன்னும் தொடர்பில் உள்ளார்களா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- வெட்க கெட்ட காங்கிரஸ்.. பாஜக - அதிமுக கூட்டணி குறித்து பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை! போட்டு தாக்கும் பாஜக.!