அதிமுக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவின் படுக்கை அறைக்குள் மர்மநபர் இருந்ததாகவும், வீட்டில் ஆணுறை இருந்ததாகவும் பரபரப்பு புகார் கொடுத்த அவரது இரண்டாவது கணவர் தற்போது விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அதிமுக வின் முன்னாள் மாநிலங்களவை எம்.பி ஆக இருந்தவர் சசிகலா புஷ்பா. அப்போது திமுக மாநிலங்களவை எம்.பி ஆக இருந்த திருச்சி சிவாவுக்கும் இவருக்கும் இடையில் என்ன தொடர்பு என்று பல்வேறு விதமான புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சைகள் கிளம்பின. இந்த பிரச்சனை வெடித்த நிலையில், டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி திருச்சி சிவாவை கன்னத்தில் பளார் என்று ஓங்கி அறைந்து மீண்டும் பூதாகரமான சர்ச்சையை கிளப்பி, ஹாட் டாப்பிக்கில் சிக்கியவர் சசிகலா புஷ்பா.

அதிரடி பேச்சுகளுக்கும் அதிரடி செயல்களுக்கும் சொந்தக்காரரான இவர் அடிக்கடி பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம்.மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் தன்னை கன்னத்தில் அறைந்தனர் என மாநிலங்களவையில் அவர் பேசிய பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பல்வேறு அணிகள் மாறிக்கொண்டே இருந்த இவர், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு முயற்சி செய்தார் என்று பேசப்பட்டது.பின்னர் அதிமுகவிலிருந்து விலகிய இவர், அதிரடியாக பாஜகவில் இணைந்தார். இவர் பாஜகவில் இணைந்த சில நாட்களில் இவருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டது. 

இப்படி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த சசிகலா புஷ்பா தலைநகர் டெல்லியில் வழக்கறிஞர் ராமசாமி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இருவரும் சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக வழக்கறிஞர் ராமசாமி சென்னை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் மதுரையிலிருந்து சென்னைக்கு திரும்பிய போது வீட்டின் படுக்கை அறையில் சசிகலா புஷ்பா இருந்தார் எனவும், மற்றொரு படுக்கையில் மர்ம நபர் ஒருவர் இருந்தார் எனக் கூறினார். மேலும் அமுதா என்ற பெண்ணும் இருந்ததாகவும் வீட்டில் மதுபானங்கள் மற்றும் உணவு பொட்டலங்கள் சிதறி கிடந்ததாக கூறினார்.

வீட்டுக்குள் மர்ம நபர்களை அனுமதித்து குறித்து சசிகலா புஷ்பாவிடம் தட்டிக் கேட்ட போது தன்னை தஞ்சாவூர் ராஜா, சசிகலா புஷ்பா, அமுதா ஆகியோர் மிரட்டியதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தார். புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை முடிவில் சசிகலா புஷ்பா தஞ்சாவூர் ராஜா அமுதா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இது குறித்து பேசிய ராமசாமி தனது வீட்டில் சசிகலா புஷ்பா பாலியல் தொழில் செய்ததாகவும் புகார் அளித்தார்.

இந்நிலையில், சசிகலா புஷ்பாவின் இரண்டாவது கணவரான வழக்கறிஞர் ராமசாமி சசிகலா புஷ்பாவிடம் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் 2022 ஆம் ஆண்டு விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. வழக்கறிஞர் ராமசாமி அனுப்பியுள்ள விவாகரத்து நோட்டீஸில் திருமணத்திற்குப் பின்பு சசிகலா புஷ்பா தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், இது தொடர்பாக டெல்லி, தூத்துக்குடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சசிகலா புஷ்பா அவரது இரண்டாவது கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் தற்போது மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.