Asianet News TamilAsianet News Tamil

தலைவரை மறந்துட்டாங்களே... ஸ்டாலின் -உதயநிதி மீது உடன்பிறப்புகள் குமுறல்..!

இது தற்செயலாக நடக்கிற மாதிரி தெரியவில்லை. கலைஞருக்கு தொடர்ந்து விளம்பரம் தந்தால் எதிர்காலத்தில் உரிமை பிரச்சனைகள் வரலாம் என்கிற எண்ணத்தில் ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறார்கள்.

Forget the leader ... Stalin-siblings murmur against Udayanidhi
Author
Tamil Nadu, First Published Dec 4, 2020, 11:47 AM IST

கருணாநிதி இறந்து இரண்டு ஆண்டுகள் கூட முடியவில்லை. அதற்குள் அவரை இருட்டடிப்பு செய்வதா? என்கிற கொதிப்பு திமுகவில் இப்போது உச்சத்தில் இருக்கிறது. எல்லாம் இப்போதைய தலைவரோட கிச்சன் கேபினட் செய்யும் வேலை இது என இவர்கள் இந்த புறக்கணிப்பின் பின்னணியையும் விளக்குகிறார்கள்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மீது ஆயிரம் விமர்சனங்கள் உண்டு என்ற போதிலும் அவரது ஆளுமையை, அயராத உழைப்பை அரசியல் எதிரிகள் கூட ஒத்துக்கொள்வார்கள். கடந்த அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக திமுக தலைவர் பதவியை வகித்தவர். இந்திய அளவில் வேறு எந்தக் கட்சித் தலைவருக்கும் இத்தகைய பெருமை கிடையாது.

Forget the leader ... Stalin-siblings murmur against Udayanidhi

இப்படி திமுகவின் முகமாக அறியப்பட்ட கருணாநிதி அரசியலில் தன்னை வளர்த்து ஆளாக்கிய ஈவேரா, அண்ணா ஆகியோரை ஒருபோதும் மறந்ததில்லை. கட்சி தொடர்பான எல்லா விளம்பரங்களிலும் இந்த இருவரது படங்கள் கண்டிப்பாக இடம்பெறுவதை கடைசிவரை கருணாநிதி உறுதி செய்தார். இப்படி முன்னோடிகளை மறவாமல் இருந்த கருணாநிதி தற்போது முற்றிலுமாக இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறார். திமுக தொடர்பான சமீபத்திய எந்தவொரு விஷயத்திலும், விளம்பரங்களிலும் கருணாநிதியின் பெயரோ, புகைப்படமோ இடம்பெறுவதில்லை.

குறிப்பாக கட்சியின் தேர்தல் பிரச்சாரமான ‘விடியலை நோக்கி.., ஸ்டாலினின் குரல்’நிகழ்ச்சியில் கருணாநிதி முழுமையாக இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறார். பிரச்சார வேன்களில் தொடங்கி போஸ்டர்கள், பேனர்கள் எதிலும் கருணாநிதியின் படங்களை காண முடியவில்லை. முழுக்க முழுக்க ஸ்டாலினும், அவரது மகன் உதயநியும்தான் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்திருக்கிறார்கள். கனிமொழி செல்லும் இடங்களில் மட்டும் போனால் போகிறதென்று அவருக்கு கொஞ்சூண்டு விளம்பரம் தரப்படுகிறது.Forget the leader ... Stalin-siblings murmur against Udayanidhi

திமுக தலைமை கருணாநிதியை இப்படி இருட்டடிப்பு செய்வது, அந்த கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தென் பகுதியைச் சேர்ந்த ஒரு மாவட்ட செயலாளர் கூறியதாவது; ‘’எங்க கட்சி இப்ப கட்சியாக இல்லை. பிரசாந்த் கிஷோரின் மேற்பார்வையில் ஒரு கம்பெனியாக செயல்பட்டு வருகிறது. லியோனி பிரச்சாரத்தின்போது உடன் வந்திருந்த ‘ஐபேக்’ஆட்கள் ரொம்பவே அதகளம் பண்ணினாங்க. வெறுத்துப்போன ஒரு ஒன்றிய செயலாளர், ‘கலைஞர் இல்லாத காரணத்தால் யார் யாரோ அதிகாரம் பண்றாங்க’என சொன்னார். உடனே ஐபேக் டீமின் முக்கிய புள்ளி ‘கலைஞரா? யார் அவர்?’என்று கேட்க, நாங்கள் எல்லாம் தலையில் அடித்துக் கொண்டோம். கட்சியை வழிநடத்துகிறவர்களுக்கே கலைஞர் என்றால் யார் என தெரியவில்லை.Forget the leader ... Stalin-siblings murmur against Udayanidhi

இது தற்செயலாக நடக்கிற மாதிரி தெரியவில்லை. கலைஞருக்கு தொடர்ந்து விளம்பரம் தந்தால் எதிர்காலத்தில் உரிமை பிரச்சனைகள் வரலாம் என்கிற எண்ணத்தில் ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறார்கள். இதெல்லாம் தற்போதைய தலைவரோட கிச்சன் கேபினட் எடுக்கிற முடிவு என எங்களைப் போன்றவர்களுக்கு நன்றாகத் தெரியும். கட்சியை வளர்க்க பாடுபட்ட மனிதரை புறக்கணிக்கும் இவர்களை மக்கள் புறக்கணிக்காமல் இருந்தால் சரிதான்’’ என்கிறார். 

Follow Us:
Download App:
  • android
  • ios