Asianet News TamilAsianet News Tamil

ஆரியன், திராவிடன் என அந்நியர்கள் நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்தினார்கள் - ஆளுநர் ரவி பேச்சு

சாதி, மதம், ஆரியன், திராவிடன் என அந்நியர்கள் நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்தியதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

foreigners who cause the division into case and religious says tn governor rn ravi in coimbatore
Author
First Published Aug 25, 2023, 5:30 PM IST

கோவை பேரூர் பகுதியில், அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற நொய்யல் விழாவில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர். என்.ரவி கலந்துகொண்டார். இந்நிகழ்வில் பேசிய அவர், தென்னாடுடைய  சிவனே போற்றி, என்னாட்டவருக்கும் இறைவா போற்றி என தமிழில் உரையை துவங்கினார். சந்நியாசிகள் பங்கேற்றுள்ள  நிகழ்வில் பங்கேற்பது ஆசிவதிக்கப்பட்டதாக உணர்கிறேன்.

நொய்யல் ஆறு மீட்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு மிகவும் பாராட்டுக்குரியது. நம் நாட்டில் நீர்நிலைகள் உடனான தொடர்பு என்பது உணர்வுகளுடன் தொடர்புடையது. ஆனால், பல ஆண்டுகள் நம் கலாசாரம், உயிர்த்தன்மையை சிதைக்கும் எண்ணத்துடன் வந்த அந்நியர்களின் படையெடுப்பு, ஆக்கிரமிப்பால் அந்த உணர்வு துண்டிக்கப்பட்டது. 

காலை உணவுத்திட்டத்தால் அரசுப்பள்ளிகளில் 40% மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது - உதயநிதி தகவல்

பாரதம் என்றால் என்ன என்ற கேள்விக்கு ஆறு என்று முதலில் சொல்லப்படும். படைக்கப்பட்ட குடும்பத்தில் நாம் (மனிதர்) ஒரு பொருள் என்பதை உணர வேண்டும். குருமார்கள், சந்நியாசிகள் ஆகியோர் தான்  படையெடுப்பிலும் சனாதன கொள்கையின் தொடர்பை உயிர்ப்புடன் வைத்திருந்ததாக கூறிய அவர், தற்போது மேற்கத்திய பண்பாடு நம்மை அந்த தொடர்பிலிருந்து தண்டிப்பதாகவும் குறிப்பிட்டார். 

அன்னை பூமியை பாழாக்கி வரும் இந்த காலத்தில் இதுபோன்று நிகழ்வு அவசியம். அன்னை இயற்கையை பாழாக்கி வருவதன் விளைவு தான், பருவநிலை மாற்றத்திற்கு காரணம். தண்ணீர் இல்லையென்றால் ஒன்றும் இல்லை என்பதனால், நீரை அன்னையாக பார்த்து பிரார்த்திக்க வேண்டும். அனைவரும் குடும்பம் என்ற கருத்துருவை நம் நாடு உலக நாடுகளுக்கு ஜி20 மாநாடு மூலம் பிரதமர் கூறி வருகிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்  பல வகைகளில் பூமியில் வாழும் அனைத்து உயிர்களிடத்திலும் தொடர்பை வெளிப்படுவதை ரிஷிகள் சொன்னதுடன், அனைவரும் ஒரு குடும்பமாக வாழும் நிலையில், ஒருவருக்கு பிரச்சினை என்றால் அது மற்றவற்றை பாதிக்கும் என சொன்ன ரிஷிகள் நம் பாரதத்தில் உள்ளதால் அந்த பொறுப்பு நமக்கு அதிகம். 

கோவிலுக்கு ரூ.100 கோடியை வாரி வழங்கிய வள்ளல்; வங்கிக்குச் சென்ற நிர்வாகிகளுக்கு காத்திருந்த ட்விஸ்ட்

அந்நியர்கள் படையெடுப்புக்கு பிறகும், நம்மை விட்டுச் சென்றவுடன், நாட்டில் தொழிற்சாலைகள், பொருளாதாரம் வளர்ந்தாலும்,  பாரதத்துடனான உயிர் தொடர்பு துண்டிக்கப்பட்டது. சாதி, மதம், ஆரியன், திராவிடன் என பிரிவினையை நம்மிடையே ஏற்படுத்தினார்கள். நம் நாட்டை வலுப்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமை. ராஜா, ராணியாக செயல்படுவது நம் பாரதமில்லை. சமூகம் அடிப்படையில் ஒரு குடும்பமாக வாழ்பவர்கள் நாம். 

அந்த சமூகத்தை மீட்க வேண்டிய நிலையில் உள்ளோம். நம் நாட்டை இந்நாட்டு மக்கள் தான் உருவாக்கினார்கள். அரசு உருவாக்கவில்லை. நிலவுக்கு போக வேண்டிய அவசியம் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் 100 ஆண்டுகளில் இராணுவ அதிகாரத்தால் ஆளப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டு, அணு ஆயுதங்கள் செய்ய கூடாது என்று சொன்ன நாடுகளின் மத்தியில், இந்தியா வளர்ந்து, நிலவு அவர்களுடைய சொந்தமில்லை என்பதையும், ஆனால் சில நாடுகள் அதை சொந்தம் கொண்டாட நினைப்பதாகவும், ஆனால் தற்போது இந்தியாவால் அதை சாதிக்க முடிந்ததாகவும், அனைவருக்கும் சொந்தம் என்ற அடிப்படையில் நாம் வெற்றிபெற்று உள்ளளோம். நம் வலிமையை காண்பித்து உள்ளதாக கூறினார்.

கொரோனா தடுப்பூசி மூலம் சம்பாதிக்க வேண்டும் என்று சில நாடுகள் எண்ணியது போல் நாம் எண்ணாமல் பகிர்ந்து கொண்டோம். உலகத்தின் நன்மைக்காக நாம் புது வலிமையுடன், உறுதியுடன், தெளிவுடனும் பயணிக்கிறோம். 2047ல் இந்தியா முழுமையாக வலிமையான, வளர்ந்த நாடாக இருக்கும் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios