சந்திரயான்2 கடைசி நிமிடத்தில் பின்னடைவு ஏற்பட்டதற்கு சில வெளிநாடுகளின் சதியாக கூட இருக்கலாம் என காங்கிரஸ் எம்.பி ஹெச்.வசந்தகுமார் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாகர்கோயில் காங்கிரஸ் எம்.பி ஹெச்.வசந்தகுமார் இது குறித்து கூறுகையில்,  தமிழகத்தில் தி.மு.க, காங்கிரஸ் உறவு சுமூகமாக உள்ளது. சந்திரயான் -2 கடைசி நிமிடத்தில் பின்னடைவு ஏற்பட்டதற்கு சில வெளிநாடுகளின் சதியாக கூட இருக்கலாம்.

இந்தியா வல்லரசாக விட கூடாது என்பதற்காக சதி செய்திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். தமிழகத்தில் அரசும், எதிர் கட்சியும் போட்டிபோட்டு குளங்கள் தூர்வாருவது வரவேற்க தக்கது. அதுமட்டுமின்றி தண்ணீர் வீணாவதை தடுக்க தடுப்பணைகள், கட்டுவது, பழுதான செட்டர்களை சீர் செய்வது உள்ளிட பணிகளை செய்யவேண்டும். மத்திய மோடி அரசு காங்கிரஸ்காரர்களை தேடி தேடி வழக்கு போடுவதை தவிர்த்து வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதிலும், நாடுநலனிலும் அக்கறை காட்டவேண்டும்’’ என்று அவர் கேட்டுக்கொண்டார்.