இருபோக சாகுபடி பரப்பை 10 ஆண்டுகளில் 20 லட்சம் ஹெக்டேர்களாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயப் பெருமக்களின் நெடுங்காலத் துயரை துடைக்கின்ற வகையிலும், விவசாயத் துறையினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லுகின்ற வகையிலும், தமிழக வரலாற்றில் "முதல் வேளாண் பட்ஜெட்" இன்று தாக்கல் செய்யப்படுகிறது. 
வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார் உழவர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், ‘’டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு வேளாண் பட்ஜெட் அர்ப்பணிக்கப்படுகிறது. கிராம அளவிலான வேளாண் தொகுப்புத் திட்டம், மானாவாரி நில மேம்பாடு, தரிசு நில மேம்பாடு, இயற்கை வேளாண்மை, மழைநீர் சேகரிப்பு, ஆகிய துறைகள் நிதிநிலை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. தென்னை, கரும்பு, பருத்தி, சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்கள் உற்பத்தியில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களில் தமிழ்நாடு இடம் பெற வழி வகை செய்யப்படும். 
உணவு தன்னிறைவை தமிழகம் ஓரளவு எட்டிவிட்டது. இருபோக சாகுபடி பரப்பை 10 ஆண்டுகளில் 20 லட்சம் ஹெக்டேர்களாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராம அளவில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடக்கம். "சர்வதேச நிபுணர்களின் கருத்தை கேட்டு வேளாண் பட்ஜெட்டை தயாரித்துள்ளோம்; தமிழ்நாட்டில் விவசாயம் நடைபெறும் பரப்பளவு 11.07 லட்சம் ஹெக்டேர் கூடுதலாக்கப்படும். இருபோக சாகுபடி நடைபெறும் பரப்பை
10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். 
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். நிகர சாகுபடி பரப்பை 60 சதவிகிதத்தில் இருந்து 75 சதவிகிதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக மாற்றிட நடவடிக்கை எடுக்கப்படும். கிராம அளவிலான வேளாண் தொகுப்புத் திட்டம், மானாவாரி நில மேம்பாடு, தரிசு நில மேம்பாடு, இயற்கை வேளாண்மை, மழைநீர் சேகரிப்பு, ஆகிய துறைகள் நிதிநிலை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன’’ என அவர் தெரிவித்தார்.
