தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் விஷயமல்ல இது.. ப்ளீஸ் இந்த விஷயத்துல அரசியல் செய்யாதீங்க.. அமைச்சர் மா.சு..!
கால்பந்து வீராங்கனை பிரியா மரண விவகாரத்தை கடந்து செல்ல மாட்டோம். யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
கால்பந்து வீராங்கனை பிரியா மரண விவகாரத்தை கடந்து செல்ல மாட்டோம். யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா அரசு மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சையால் இன்று காலை உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோர்களிடம் ஒப்படைக்க முயன்ற போது உடலை வாங்க மறுத்து பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு மருத்துவர்களை கைது செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க;- கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்தது எப்படி? அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன பரபரப்பு தகவல்..!
இதையடுத்து, கொளத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சோமசுந்தரம், பால் ராம் சங்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டது. உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மகளின் உடலை வாங்க பெற்றோர் சம்மதித்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- மருத்துவர்கள் கவனக்குறைவாக ஏற்பட்ட துயரமான சம்பவம் இது என்றும் கால்பந்து வீராங்கனை பிரியா இழப்பை அரசியலாக்க கூடாது. ரத்த நாளங்களில் ஏற்பட்ட ரத்த ஓட்ட பாதிப்பால் இருதயம், சிறுநீரகம் உள்ளிட்டவைகள் அடுத்தடுத்த செயலிழந்ததால் பிரியா உயிரிழந்தார்.
விசாரணையில் மருத்துவர்கள் கவனக்குறைவுடன் செயல்பட்டது தெரியவந்தது. மாணவி மரணம் குறித்த தகவல் அறிந்த உடனடியாக நிவாரணத் தொகையாக ரூ.10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், அவருக்கு மூன்று அண்ணன், தம்பிகள் இருக்கிறார்கள். அவர்களில் யாரேனும் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்றார். இதை யாரும் அரசியலாக பார்க்கக்கூடாது. தூண்டிவிட்டுப் பார்ப்பதற்கான விஷயம் இது அல்ல. இதனை வேறுவகையில் கிளறிவிட்டு அரசியல் செய்வது ஒரு சரியான செயலாக அரசியல் தலைவர்களுக்கு இருக்காது என்று நான் கருதுகிறேன் என்றார்.
இதையும் படிங்க;- டாக்டர்களின் தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு! ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்
குடும்பத்தினர் வீராங்கனையின் உடலை வாங்கிக் கொள்ள சம்மதம் தெரிவித்து விட்டனர். கால்பந்து வீராங்கனை பிரியா மரண விவகாரத்தை கடந்து செல்ல மாட்டோம். யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- என் மகளை கொன்னுட்டாங்க.. அவங்கள சும்மா விடாதீங்க.. கதறும் பிரியாவின் தந்தை..!