என் மகளை கொன்னுட்டாங்க.. அவங்கள சும்மா விடாதீங்க.. கதறும் பிரியாவின் தந்தை..!
என் மகள் பிரியாவுக்கு கவனக்குறைவாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கைது செய்யப்பட வேண்டும் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் தந்தை கூறியுள்ளார்.
என் மகள் பிரியாவுக்கு கவனக்குறைவாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கைது செய்யப்பட வேண்டும் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் தந்தை கூறியுள்ளார்.
சென்னை வியாசர்பாடியில் 17 வயதுடைய கால்பந்து வீராங்கனை பிரியா காலில் தசைப்பிடிப்பு காரணமாக கொளத்தூரில் உள்ள பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் அளித்த தவறான அறுவை சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் அலட்சியத்தால் தான் பிரியா உயிரிழந்தார் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனையடுத்து, ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் பதற்றம் நீடிப்பதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க;- நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள போறோம்.. தாய், மகள் பலி.. ஐசியூவில் தந்தை.. நடந்தது என்ன?
இந்நிலையில், பிரியாவின் தந்தை ரவிக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தனது மகளுக்கு கால்வலி ஏற்பட்டுள்ளதாக கொளத்தூர் மருத்துவமனைக்கு சென்றபோது, ஜவ்வு தான் கிழிந்துள்ளது. நாங்களே அதை சரிசெய்து விடுகிறோம். ஆகையால், பெரிய மருத்துவமனைக்கு செல்ல தேவையில்லை என்று கூறினார்கள். ஆனால், அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் இருந்து வலியால் துடித்து வந்துள்ளார்.
அவ்வப்போது வலி தெரியாமல் இருக்க மயக்க ஊசி போட்டார்கள். இதனால் அவள் தூங்கிவிட்டாள். இதனையடுத்து, சீனியர் மருத்துவர்கள் வந்து உடனே ரத்தம் அதிக அளவு வெளியேறியதால் இறுக்கமாக கட்டு போட்டு விட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டனர் என குற்றம்சாட்டினார். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். ஆனால், அதற்குள் ரத்தம் உறைந்து தன் மகள் உயிரிழந்துவிட்டால் என தந்தை கதறியபடி கூறினார். பிரியா உயிரிழப்பார் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. என் மகள் பிரியாவுக்கு கவனக்குறைவாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கைது செய்யப்பட வேண்டும். இனி போன்று எந்த அரசு மருத்துவமனையிலும் யாருக்கும் நடக்கக்கூடாது என கூறினார்.
இதையும் படிங்க;- கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்தது எப்படி? அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன பரபரப்பு தகவல்..!