பாஜக வை சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழில் டெல்லி தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது.அது குறித்து தலையங்கம் எழுதியவர்கள் மோடி,அமித்ஷா யாராலும் வீழ்த்த முடியாதவர்கள் அல்ல. பாஜக செலவாக்கு அட்டை கத்தி போல் சிரிந்து விட்டது என்று தொடர்ச்சியாக அந்த நாளிதழில் பாஜகவை வெளுத்தெடுத்தது.இதற்கிடையில் என்ன நடந்தது? ஏன்? திடீர் மனமாற்றம் சிவசேனாவிற்கு என்று தெரியவில்லை.பாஜக கொண்டு வந்த சிஏஏ சட்டத்தை நிறைவேர்றியே தீருவோம் என்று அம்மாநில மக்களை அதிர்ச்சியடைச் செய்திருகிறது.

மராட்டியத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. அந்த கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும் சிவசேனா,சிஏஏ சட்டத்தை ஆதரித்து மக்களவையில் வாக்களித்தது. ஆனால் கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மாநிலங்களவையில் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது.அதே நேரத்தில் மத்திய அரசின் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்க மாட்டோம் என முதலமைச்சர உத்தவ் தாக்கரே தெரிவித்திருந்தார்.ஆனால்,தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மராட்டியத்தில் தடை இல்லை என்று திடீரென அறிவித்திருப்பது மராட்டிய மாநிலத்திலும்,கூட்டணிக்கட்சிகளிடமும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

குடியுரிமை திருத்த சட்டம் மராட்டியத்தில் அமல்படுத்தப்படும் , யாரும் கவலைப்பட வேண்டாம். தேசிய குடிமக்கள் பதிவேடு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டால் அது மராட்டியத்தில் அமல்படுத்தப்படாது என்று சொன்னவர்,திடீர் பல்டி அடித்தது மர்மமாகவே இருக்கிறது.மத்திய அரசு உத்தவ்தாக்கரே யை மிரட்டி அடிபணிய வைத்திருக்குமோ? என்கின்ற சந்தேகம் கூட்டணிக்கட்சிகளுக்கும்,அம்மாநில மக்களுக்கும் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.