"கேரள தலைமைச் செயலகத்தில் ஏற்பட்ட தீ, தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான முக்கிய ஆதாரங்களை அழிப்பதற்கான சதி வேலை நடந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா குற்றம்சாட்டியிருக்கிறார்.

தங்கம் கடத்தல் விவகாரம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்வப்னா இந்த கடத்தலில் ஈடுப்பட்டது தெரியவந்தது. அவரை ஐஎன்ஏ கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை ஸ்பீடாக நெருங்கி கொண்டிருக்கும் நேரத்தில் தலைமை செயலகத்தில் தீ விபத்து நடந்திருப்பது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இதற்கிடையில் பினராயி அரசு மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வந்தது எதிர்க்கட்சிகள் அதையும் முறியடித்தார் முதல்வர் பினராயி.

 "கேரள தலைமைச் செயலகத்தில் ஏற்பட்ட தீ, தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான முக்கிய ஆதாரங்களை அழிப்பதற்கான சதி என்று எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்டவர்கள் குற்றம்சாட்டி இருக்கிறார்கள்..கேரள தலைமைச் செயலகத்தின் பொது நிர்வாகத் துறையில் தீ ஏற்பட்டது. இதுபற்றி ரமேஷ் சென்னிதலா பேசும் போது..."தீ விபத்து ஏற்பட்ட துறையின்கீழ் தான், வெளிநாட்டுப் பயணம் மற்றும் அரசியல் ஒப்புதல்கள் தொடர்பான கோப்புகள் வைக்கப்பட்டிருக்கும். அனைத்து சிசிடிவி காட்சிகளையும் என்ஐஏ கோரியிருப்பதை யாரும் மறக்கக் கூடாது. பினராயி விஜயனுக்கு தெரிந்தே அனைத்து ஆதாரங்களையும் அழிப்பதற்கான சதிதான் இது. 

தீ விபத்து பற்றி பொது நிர்வாகத் துறையின் கூடுதல் செயலர் பி. ஹனி அந்தத் துறையில் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால், வெறும் 2 பேர் மட்டுமே அங்கு இருந்தனர். கணிணியில் தீ ஏற்பட்டுள்ளது. குறைந்த மின் அழுத்தம்தான் தீ ஏற்பட்டதற்குக் காரணம். கணிணிக்கு அருகே வைக்கப்பட்டிருந்த சில பழைய கோப்புகள் நாசமடைந்தன. விருந்தினர் மாளிகையில் அறை பதிவு செய்வது தொடர்பான கோப்புகள்தான் சேதமடைந்துள்ளன. எந்தவொரு முக்கியக் கோப்புகளும் அழிக்கப்படவில்லை" என்றார்