Asianet News TamilAsianet News Tamil

இயக்குநர் பாரதிராஜா மீது வழக்குப் பதிவு….. அரசுக்கு எதிராக பேசியதாக குற்றச்சாட்டு !!

fir register Barathiraja in triplicane police station
fir register Barathiraja in triplicane police station
Author
First Published Jun 23, 2018, 6:57 AM IST


வன்முறையை தூண்டும் விதமாகவும், மதிதிய, மாநில அரசுக்கு எதிராகவும் பேசியதாக இணக்குநர் பாரதிராஜா மீது சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம், கவிஞர் வைரமுத்து  பிரச்சனை, இயக்குநர் அமீர் பிரச்சனை போன்றவற்றில் இயக்குநர் பாரதி ராஜா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவர் இந்து மக்கள் முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளர் நாராயணன் என்பவர்  சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு  ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில் இயக்குனர் அமீருக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த இயக்குனர் பாரதிராஜா தமிழக அரசை மிரட்டும் விதமாகவும், தேசத்துக்கு விரோதமாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் மாவோயிஸ்டு மற்றும் நக்சலைட்டு இயக்கம் எதுவும் இல்லை என்றும், அப்படியொரு சூழலை ஏற்படுத்தி விடாதீர்கள் என்றும்  பாரதிராஜா மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். தேச விரோதமாக பேசியதற்காக பாரதிராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துளளார்..

இதே போன்று பேசியதய்காக ஏற்கனவே வடபழனி போலீஸ் நிலையத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

எனவே, மீண்டும் வன்முறையை தூண்டும் வகையில் பேட்டி கொடுத்துள்ளதால் பாரதிராஜா மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்திருந்தார்.

நாராயணன்  அளித்த  புகாரின் அடிப்படையில், இயக்குநர் பாரதிராஜா மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், மக்களையும் அரசையும் அச்சுறுத்தும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் நேற்று இரவு வழக்குப் பதிவுசெய்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios