Asianet News TamilAsianet News Tamil

சசிகலா அக்கா மகன் டிடிவி தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம் - அந்நிய செலாவணி வழக்கில் உயர்நீதி மன்றம் அதிரடி

fine for-ttv-dinakaran
Author
First Published Jan 6, 2017, 3:02 PM IST


மத்திய அமலாக்க பிரிவின் உத்தரவை எதிர்த்து சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரன் தொடுத்த வழக்கில் அவருக்கெதிராக தீர்ப்பு வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

தற்போது அதிமுகவின் பொது செயலாளராகி உள்ள சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் மகன் டிடிவி தினகரன்.பெரியகுளம் தொகுதியின் எம்ல்ஏவாக இருந்தவர்.

1996-97 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சசிகலா, டிடிவி தினகரன்,ஜே ஜே டிவி பாஸ்கரன்,ஆகியோர் மீது பல்வேறு முறைகேடுகள் மூலம் அந்நிய செலாவணி மூலமாக பண முறைகேடு செய்ததாக 6 வழக்குகளை பதிவு செய்தது மத்திய அமலாக்கத்துறை.இந்த வழக்கு சுமார் 20 ஆண்டுகளாக நடந்தது.

fine for-ttv-dinakaran

மேலும் இது தொடர்பான வழக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றதில் விசாரிக்கப்பட்டும் வந்தது.

மே 18, 2015ஆம் ஆண்டு டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை விடுவித்து நீதிபதி தெட்சிணாமூர்த்தி உத்தரவிட்டார்.

ஆனால் அமலாக்கதுறை அறிவித்த அபராதம் அப்படியே இருந்தது.

இந்த பணத்தை உடனடியாக கட்டவேண்டும் என அமலாக்க துறையின் உதவி இயக்குனர் மூன்று தனிதனி மனுக்களை தாக்கல் செய்தார்.

அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

அதில் அமலாக்கதுறை விதித்த அபராதம் 28 கோடி ரூபாயை தினகரன் உடனே கட்டவேண்டும் என உத்தரவிடப்பட்டது.

28 கோடி ரூபாயை கட்ட மறுத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

fine for-ttv-dinakaran

எனவே டிடிவி தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அபராதம் விதித்தது சரியே என்ற அமலக்கதுறையின் வழக்கை உறுதி செய்து நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், மகாதேவன் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தற்போது அதிமுகவின் அதிகார மையமாக மாறியுள்ள டிடிவி தினகரனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios