தனது ட்விட்டர் பக்கத்தில்  இருந்து  மத்திய அமைச்சர்நிர்மலா சீதாராமன் தன்னை பிளாக் செய்துள்ளார் என நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவருமான  குஷ்பு தெரிவித்துள்ளார் வெங்காய விலை ஏற்றம் இந்திய பொருளாதார வீழ்ச்சி என கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் .  வெங்காய விலை ஏற்றம் தொடர்பாக அவர் பாராளுமன்றத்தில்  அளித்த பதிலில்,  பூண்டு வெங்காயம் தான் சாப்பிடுவதில்லை அதனால் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை என தெரிவித்திருந்தது நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது . 

பொறுப்பற்ற பதில் மத்திய அமைச்சருக்கு அழகா என கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார் நிர்மலா சீதாராமன், இந்நிலையில்  எதிர்க்கட்சியான காங்கிரஸ்  கட்சியின் செய்தி தொடர்பாளர் களில் ஒருவரான நடிகை குஷ்பு மத்திய அரசின் மீது  தொடர்ந்து  விமர்சனங்களை  முன்வைத்து வருகிறார் சில தினங்களுக்கு முன்பு பாஜக தேசிய செயலாளர் களில் ஒருவரான எச் ராஜாவை பைத்தியக்காரர்  எனக்கூறி அதிரடி காட்டியிருந்தார் குஷ்பு .  இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில்  அமைச்சர்  நிர்மலா சீதாராமனை கேள்விமேல் கேள்வி கேட்டு வறுத்தெடுத்து வந்தார்.  இந்நிலையில்  தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல்  பதிவிட்டுள்ள  குஷ்பு  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  என்னை பிளாக் செய்து விட்டார் . 

அவர் உண்மையை கேட்க விரும்பவில்லை,  அவர் அமித்ஷாவை போல மோடியை போல பொய்யை மட்டும் சுவாசித்து உண்டு வாழும் நபர்களுடன் வாழ்வதால் அவர் மீது குற்றம் சொல்ல ஒன்றுமில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார் .  பொருளாதார மந்த நிலை குறித்து காங்கிரஸ் கட்சியினர்  அடிக்கடி விவாதிக்கப்பட்டு  வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதமே குஷ்புவை நிர்மலா பிளாக் செய்துள்ளார் . இந்நிலையில் அதை  நினைவு கூர்ந்து மீண்டும் குஷ்பு இவ்வாறு  பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.