சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கூட்டணியை உடைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்த பாஜகவுக்குள் தற்போது உட்கட்சி மோதல் எழுந்துள்ளது. குறிப்பாக முன்னாள் முதல்வர் பட்னாவிஸ்க்கு எதிராக குரல் எழுந்துள்ளது.

பங்கஜா முண்டேவின் தந்தையும், மறைந்த பாஜக மூத்த தலைவருமான கோபிநாத் முண்டேவின் பிறந்த தினத்தையொட்டி (டிச. 12), மகாராஷ்டிரத்தில் பீத் மாவட்டத்தில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் பங்கேற்று ஏக்நாத் கட்சே பேசியதாவது:2014-ஆம் ஆண்டு மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ் தலைமையிலான ஆட்சியில்தான் அமைச்சரானேன். எனினும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் எனக்கு எதிராக நில அபகரிப்பு குற்றச்சாட்டு எழுந்ததால் பதவி விலகினேன். 

ஆனால் அந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.பங்கஜா முண்டே தோ்தலில் தோல்வி அடையவில்லை. அவா் வேண்டுமென்றே தோற்கடிக்கப்பட்டாா். கட்சியில் உள்ள சிலரால் திட்டமிட்டு அவா் வீழ்த்தப்பட்டார்.

கோபிநாத் முண்டேவின் மகளை தோல்வி அடையச் செய்ய எப்படி அவா்களால் நினைக்க முடிந்தது என்று புரியவில்லை. கோபிநாத் முண்டேவும், அவரது மகள் பங்கஜாவும் மாநிலத்தின் வளா்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா் என்றார் பங்கஜா கூறியதாவது:

கட்சியிலிருந்து நான் விலகப்போவதாக விவாதங்களும், ஆலோசனைகளும் ஊடகங்களால் நடத்தப்படுகின்றன.நான் கட்சியில் எந்தப் பதவியையும் பெற்றுவிடக் கூடாது என்று சிலா் வேண்டுமென்றே இதை செய்கிறாா்கள்.

நான் கட்சியில் எந்தப் பதவியையும் கேட்கவில்லை. கட்சியைக் கட்டுப்படுத்தி வைக்கக் கூடியவா்கள் தேவையில்லை. அனைவரின் கருத்துகளையும் கேட்கக் கூடிய சூழ்நிலை கட்சியில் ஏற்பட வேண்டும். நான் கட்சியை விட்டு விலகவில்லை. ஆனால், அதிருப்தியில் இருக்கிறேன் என்றார்.