Asianet News TamilAsianet News Tamil

மற்றொரு வழக்கிலும் சசிகலாவுக்கு சிக்கல்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் மே 13-ம் தேதி சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

FERA case...appear sasikala
Author
Chennai, First Published May 2, 2019, 5:47 PM IST

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் மே 13-ம் தேதி சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கு 1996-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

 FERA case...appear sasikala

நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட சசிகலா, பாஸ்கரன் ஆகியோரிடம் குற்றச்சாட்டு பதிவு செய்ய எழும்பூர் நீதிமன்றம் முடிவு செய்தது. இதற்காக இருவரையும் நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், அந்நியச் செலாவணி வழக்கில் காணொலிக் காட்சி மூலம் அவர் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அப்போது பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா காணொலிக் காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, அரசுத் தரப்பு சாட்சிகளை சசிகலா தரப்பில் குறுக்கு விசாரணை செய்ய அனுமதியளித்து, விசாரணையை நீதிபதி மலர்மதி ஒத்திவைத்தார்.FERA case...appear sasikala

இந்நிலையில், அந்நிய செலாவணி மோசடி வழக்கில், நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க வரும் 13-ம் தேதி சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என பெங்களூரு சிறைத்துறைக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த வழக்கில் முன்பு செய்ததைப் போன்று காணொலிக் காட்சி மூலம் ஆஜராக அனுமதி கோரி சசிகலா மனுதாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios