Asianet News TamilAsianet News Tamil

தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்திற்கு ஸ்டாலின் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி

farmer suicide
Author
First Published Nov 26, 2016, 12:49 PM IST


தமிழகத்தில் பருவமழை குறைந்தது. இதனால், விவசாயிகள் கடும் பாதிப்படைந்தனர். விவசாயம் செய்ய முடியமல் தவித்தனர். இதற்கிடையில் தமிழகம் – கர்நாடகம் இடையே பல்வேறு போராட்டங்கள் நடத்தி மேட்டூர் அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

இதை தொடர்ந்து, சம்பா சாகுபடிக்காக கடந்த செப்டம்பர் 20ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதால், சம்பா பணிகளை விவசாயிகள் செய்தனர். ஆனால், தண்ணீர் போதிய அளவுக்கு கிடைக்கவில்லை. இதனால், சம்பா பயிர்கள் கருகியது. இந்த துயரத்தில் பலர்மாரடைப்பு ஏற்பட்டும், தற்கொலை செய்து கொண்டும் இறந்தனர்.

இறந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு ஆறுதல்கூறி நிதி உதவி வழங்குவதற்கு, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டார். உயிரிழந்த விவசாயிகள் 10 பேரது வீடுகளுக்கு நேரில் சென்று, தலா குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார்.

farmer suicide

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் தாமரைக்குளம் கிராமத்தில் விவசாயி முத்துசாமி தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த மஞ்சள் பயிர் கருகியதால் மனமுடைந்த முத்துசாமி, தனது நிலத்திலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

கடந்த 12ம் தேதி, காலிங்கராயன் கால்வாயில் பாசனத்துக்கான தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், பருவமழை பெய்யாத்தால், பவானிசாகர் அணையின் நீர் இருப்பு வேகமக குறைந்தது. இதையொட்டி கடந்த செப்டம்பர் 9ம் தேதி அணையில் இருந்து தண்ணீர்நிறுத்தப்பட்டது.

இதனால் விவசாயிகள் பயிர் செய்து வைத்த மஞ்சள், நெல் போன்றவை தண்ணீர் இல்லாமல் வாடின. தனது நிலத்தில் பயிரிடப்பட்ட மஞ்சள் பயிர் கருகியதைக் கண்டு மனமுடைந்த விவசாயி முத்துச்சாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன், ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அடுத்த கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கே.பி.ராமலிங்கம் என்பவர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைதொடர்ந்து தாமரைக்குளம் கிராமத்தில் விவசாயி முத்துச்சாமி தற்கொலை செய்து கொண்டார்.

பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்துக்கு உட்பட்ட 24,500 ஏக்கருக்கும், காலிங்கராயன் கால்வாய் பாசனத்திற்குட்பட்ட 15, 400 ஏக்கருக்கும், கீழ்பவானி பாசனத்திற்குட்பட்ட இரண்டு லட்சத்து 7000 ஏக்கருக்கும் நீர் வழங்கப்படுகிறது.

பருவமழை பொழிவு, நீர் வரத்து குறையும்போது, அதற்கேற்ப சதவீத அடிப்படையில் விநியோகிக்கும் நீரின் அளவு அளவிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதனால், விவசாயிகள் தற்கொலைகள் தொடர்வது ஈரோடு மஞ்சள் விவசாயிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

farmer suicide

இறந்து போன விவசாயி முத்துச்சாமி குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், பாசனத்திற்கு 15 நாட்களுக்கு உடனடியாக உயிர் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். காவிரி தண்ணீர் கிடைக்காததது, பொய்த்துப் போன பருவமழை காரணமாக பயிர்கள் கருகி வருவதால் டெல்டா மாவட்டங்களில் 8 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று, அவரதுகுடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிவாரண நிதி வழங்கினார்.

தஞ்சையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக பொருளாளர் ஸ்டாலின், திருச்சியில்நேற்று இரவு ஓய்வெடுத்தார். பின்னர், இன்று காலை கார் மூலம் குளித்தலை சென்று, கட்சி நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பின்ன, அங்கிருந்து காலை, 830 மணிக்கு, கொடுமுடி சென்றார். அங்கிருந்து வெங்கமேட்டூரில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி முத்துசாமி வீட்டுக்கும், பின்னர், கரட்டுப்பாளையத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி ராமலிங்கம் வீட்டுக்கும் நேரில் சென்று, ஆறுதல் கூறினார். இன்று மதியம் கோவைக்கு புறப்படுகிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios