Asianet News TamilAsianet News Tamil

இப்படி நாக்கூசாமல் அண்டப்புளுகு புளுக வெட்கமா இல்லையா? அன்புமணியை கழுவி கழுவி ஊத்தும் பாதிக்கப்பட்ட விவசாயி!!

பாமக, சில ஊடகங்களும் ஏதோ அன்புமணி மட்டுமே எட்டு வழிச்சாலைக்கு எதிராக வழக்குப் போட்டு இத்தீர்ப்பை பெற்றுத் தந்ததாக நாகூசாமல் பொய்யுரைக்கிறார்கள் என  பாதிக்கப்பட்ட விவசாயி எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்புமணியை கிழித்து தொங்கவிட்டுள்ளார்.

Farmer Statements Against Anbumani
Author
Chennai, First Published Apr 12, 2019, 3:05 PM IST

பாமக, சில ஊடகங்களும் ஏதோ அன்புமணி மட்டுமே எட்டு வழிச்சாலைக்கு எதிராக வழக்குப் போட்டு இத்தீர்ப்பை பெற்றுத் தந்ததாக நாகூசாமல் பொய்யுரைக்கிறார்கள் என  பாதிக்கப்பட்ட விவசாயி எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்புமணியை கிழித்து தொங்கவிட்டுள்ளார்.

பி.வி. கிருஷ்ணமூர்த்தி, பாதிக்கப்பட்ட விவசாயி எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், அ.பள்ளிப்பட்டி, பாப்பிரெட்டிபட்டி தாலுகா, தருமபுரி மாவட்டம், செல்: 8608696252   இந்த விலாசம் குறிப்பிட்டு எட்டு வழிச்சாலைக்கு எதிராக முதலில் வழக்கு போட்டு எட்டு வழிச்சாலையை தடுத்து நிறுத்தியது பாதிக்கப்பட்ட விவசாயி கிருஷ்ணமூர்த்தியாகிய நான் தான் ! என ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Farmer Statements Against Anbumani

பாடுபட்டு விளைய வைத்தது நான்! அறுவடை செய்வது நீங்களா? , எட்டு வழிச்சாலைக்கு எதிரான வழக்கை பாமகவின் திரு. அன்புமணி முதலில் போட்டதாக பொய்யுரைப்பதா?  நேர்மையிருந்தால் என்னோடு அன்புமணி விவாதத்திற்கு தயாரா? இப்படியான பல அடுக்கடுக்கான கேள்விகளை முன்னிறுத்திய அந்த அறிக்கையில்;  எட்டு வழிச்சாலைக்கு எதிரான வழக்கை முதலில் போட்டு அவ்வழக்கின்மூலம் (வழக்கு எண். W.P. No. 16630/2018) எட்டு வழிச்சாலைக்கு எதிரான தடையாணையையும் பெற்றது எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தின் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.வி. கிருஷ்ணமூர்த்தியாகிய நான். எனவேதான் எட்டு வழிச்சாலைக்கு எதிரான தடை உத்தரவு தீர்ப்பின் முதல் பக்கத்திலேயே என் பெயர் இடம் பெற்றுள்ளது. 

ஆனால் பாமக, சில ஊடகங்களும் ஏதோ அன்புமணி மட்டுமே எட்டு வழிச்சாலைக்கு எதிராக வழக்குப் போட்டு இத்தீர்ப்பை பெற்றுத் தந்ததாக நாகூசாமல் பொய்யுரைக்கிறார்கள். பல இடங்களில் பாமகவின் வழக்கே முதல் வழக்கு என்றும் நாக்கூசாமல் பொய்யுரைக்கிறார்கள். அன்பு நண்பர் பியூஸ் மனுஷ் கூறியிருப்பது போல் 115 பக்க தீர்ப்பில் அன்புமணி பெயரோ, அவரின் வழக்கறிஞர் பெயரோ ஒரு இடத்தில்கூட குறிப்பிடப் படவில்லை. 

Farmer Statements Against Anbumani

ஆனால் யாரோ பெத்த பிள்ளைக்கு யாரோ இனிசியல் போடுவது போல், நான் போராடி பெற்ற தீர்ப்புக்கு, பாமகவும்,  அன்புமணியும் உரிமை கொண்டாடப் பார்க்கிறார்கள். சில ஊடகங்களும்  இத்தவறைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். 

பாமகவும், அன்புமணியும் போட்ட வழக்கினால்தான் இத்தீர்ப்பு வந்ததது என்று இனிமேலும் பொய் சொல்ல வேண்டாம் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். அப்படி யாரேனும் நினைத்தால்,  துணிச்சல் இருந்தால் அன்புமணி அவர்கள் என்னோடு நேரடி விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறேன். அங்கு நான்தான் எட்டு வழிச்சாலைக்கு எதிரான வழக்கை முதலில் போட்டேன் என்பதை நிரூபித்துக் காட்ட தயாராக இருக்கிறேன். 

Follow Us:
Download App:
  • android
  • ios