நேற்று ரசிகர் மன்றம், இன்று மக்கள் மன்றம், நாளை சட்டமன்றம், தளபதி விஜய் ஆட்சி வந்தா தமிழ்நாடு அமெரிக்காதான். அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் உடன் விஜய் இருப்பது போல் மதுரையில் விஜய் ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

வரும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ளன. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் வேகமாக செய்து வருகிறது. அதை எதிர் கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.  

ரஜனி அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பல்வேறு காரணங்களால் அதில் இருந்து பின்வாங்கியுள்ளார். இதனால் வழக்கம்போல அதிமுக -திமுக இடையை பேட்டி என்ற நிலை உருவாகி உள்ளது.  இந்நிலையில் மற்றொரு நடிகரான விஜய் அரசியல் பிரவேசம் தொடர்பான பேச்சுக்கள் சமீப காலமாக அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பும் தமிழக மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில், 
                             
மதுரையில் விஜய் ரசிகர்கள் அரசியல் வாசகங்கள் உடன் போஸ்டர்களை தொடர்ந்து ஒட்டி வருகின்றனர், மேலும் 2021 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இருந்து பின்வாங்கி விட்டாலும். இன்னும் நடிகர் விஜய் அரசியல் வருகையை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், மதுரையில் தளபதி விஜய் ஆட்சி வந்தால் தமிழ்நாடு அமெரிக்கா ஆகும் என்று ஒப்பிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் உடன் நடிகர் விஜய் இருப்பதுபோல் போஸ்டர்கள் மதுரை மாநகர் முழுவதும் ஒட்டி உள்ளனர்.  

நேற்று ரசிகர் மன்றம், இன்று மக்கள் மன்றம், நாளை சட்டமன்றம். தளபதி விஜய் ஆட்சி வந்தா தமிழ்நாடு அமெரிக்கா என மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.