திமுக தலைவர் கருணாநிதி மறைவு குறித்து அடுத்து, பிரபல புரோகிதர் அதிரடி கருத்தை தெரிவித்து உள்ளார். திமுக தலைவர் கருணாநிதி காலமானார் என்ற தகவலை அதிகார பூர்வமாக வெளியிட்டது காவேரி மருத்துவமனை. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர் 

திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிரதமர் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சமூக வலைதளங்களில், கருணாநிதி குறித்த தேடுதல் தான் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், கருணாநிதி மறைவு குறித்து காசி புரோகிதர் தம்புசாமி ஒரு அதிரடி கருத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

அதில், ஏகாதசி மாரணம்...துவாதசி தகனம்...கருணாநிதி ஒரு புண்யாத்மா..என தெரிவித்து உள்ளார்.அதாவது ஏகாதசி நாளான இன்று, திமுக தலைவர் கருணாநிதி மறைந்துள்ளார் என்றும் இந்த நன்னாளில் அவர் மறைந்தது மிகவும் புனிதமானது என்றும், நாளை துவாதசி தகனம் என்றும், மொத்தத்தில் கருணாநிதி புண்யாத்மா என்றும் பதிவிட்டு உள்ளார்.