திமுக தலைவரோ, அல்லது நிர்வாகிகளோ தவறான புள்ளி விவரங்களை தந்து அதிமுக செய்த நன்மைகளை கிளறிவிட்டு பதிலடி வாங்கி வருவதை வாடிக்கையாக்கிக் கொண்டுள்ளனர். அப்படியொரு வகையில்தான் தமிழக அரசின் நடவடிக்கைகளால் குறைந்த வேலை வாய்ப்பின்மை விகிதம் தெரிய வந்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியடைந்து வருகின்றன.  ஏப்ரல் மாதம் வேலைவாய்ப்பின்மை 49.8 சதவீதமாக அதிகரித்திருந்தது. ஊரடங்கு காலத்திலும் கூட, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் சீறிய முயற்சியால் தமிழகத்தில் வேலை வாய்ப்பின்மை விகிதம் குறைந்துள்ளது.

 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. மேலும், தமிழகத்தில் தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடங்கிய ஆரம்பத்தில், அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டிய சூழல் உருவானதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம், தமிழகத்தின் வேலை வாய்ப்பின்மை விகிதம் 49.8 சதவிகிதமாக அதிகரித்திருந்தது. அதேநேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊரடங்கு நாட்களில், விவசாயிகள் பாதிக்காத வகையில், அறுவடைப் பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் வருவாய் துறையிடம் அனுமதி பெற்று பணிகளை மேற்கொள்ளலாம் என கட்டுப்பாடுகளைத் தளர்த்தினார். 

இதனால் விவசாயம் சார்ந்த தொழில்கள் தொடர்ந்து எந்த தங்கு தடையும் இன்றி நடைபெற்றது. இதற்கிடையில் கொரோனா காலகட்டத்தைச் சமாளிக்க 1,769 மருத்துவர்கள் உட்பட 10,661 மருத்துவப் பணியாளர்களை நியமித்துள்ளார். அடுத்தடுத்து தமிழக அரசின் சீறிய முயற்சியால், வேலை வாய்ப்பின்மையின் விகிதம் மே மாதத்தில் 33 சதவிகிதமாகவும், ஜூன் மாதத்தில் 13.1 சதவிகிதமாகவும் குறைந்தது. ஜூலை மாதம், வேலை வாய்ப்பின்மை சதவிகிதம் தமிழகத்தில் 8.1 % ஆக குறைந்துள்ளது. 

வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் கொரோனா ஊரடங்கு காலத்திலும் கூட அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதன் ஒரு பகுதியாக 30,664 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளை தமிழகத்திற்கு முதல்வர் கிடைக்கப்பெற்றுள்ளார். இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 67,812 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும். கொரோனா கோரத்தாண்டவம் ஆடிய பேரிடர் காலத்தில் கூட, ஏப்ரல் மாதத்தில் 49.8 ஆக இருந்த வேலை வாய்ப்பின்மை விகிதத்தை தமிழக முதல்வர், தனது அதிரடி நடவடிக்கைகளால் 8.1 விகிதமாக குறைந்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தொடர்ச்சியான நடவடிக்கைகளால், வெகு விரைவில் வேலை வாய்ப்பின்மை பிரச்சனை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.