பொருட்களில் போலி பார்த்திருப்போம்.. அரசியலில் போலி ஓபிஎஸ்.. போட்டு தாக்கும் நத்தம் விஸ்வநாதன்..!
அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
பொருட்களில் போலியானவற்றை பார்த்திருப்போம். அரசியலில் போலி ஓ.பன்னீர்செல்வம் போலி என அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதன் காட்டமாக பேசியுள்ளார்.
அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க;- கட்சி கொடியையும், சின்னத்தையும் தொடர்ந்து பயன்படுத்துவேன்! உன்னால முடிஞ்சத பாத்துக்கோ! EPSஐ அலறவிடும் OPS.!
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் பொதுக்குழு விரைவில் கூட்டப்படும் என்று அறிவித்துள்ளது தொடர்பாகவும், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி தொடரலாமா? வேண்டாமா? உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய நத்தம் விஸ்வநாதன்;- பொருட்களில் போலியானவற்றை பார்த்திருப்போம். அரசியலில் போலி ஓ.பி.எஸ். கட்சியிலிருந்து அவர் ஒதுக்கப்பட்டதில் மாற்றம் ஏதும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி தொடர்ந்து செயல்படும் என ஆவேசமாக நத்தம் விஸ்வநாதன் பேசியுள்ளார்.
இதையும் படிங்க;- அதிமுகவை ஒன்றிணைப்பது இருக்கட்டும்! முதல்ல அவங்க குடும்பம் ஒன்றிணையட்டும்! டிடிவி.யை விமர்சித்த பாலசுந்தரம்.!