பொய் செய்திதான் மக்களோட உண்மையான எதிரி… கொந்தளித்த டொனால்டு டிரம்ப் !!

தொலைக்காட்சி மற்றும் செய்தித் தாள்களில்  வரும் பொய்யான செய்திகள்தான் மக்களின் உண்மையான எதிரி என்றும், தனிப்பட்ட முறையில் பத்திரிக்கைகள் மேக்களின் எதிரி அல்ல என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு தெரிவித்துள்ளார்.

Fake newses are enemy of the people told donald trump

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்ட போது, ஆபாச பட நடிகை உள்பட 2 பெண்கள் டிரம்ப் மீது பாலியல் புகார்  தெரிவித்தனர்.  அவர்களுக்கு டிரம்ப்பின் வழக்கறிஞர் மைக்கேன் கோஹன் பணம் கொடுத்து சரிகட்டியதாக புகார் எழுந்தது.

இந்நிலையில்,  அதிர்ச்சி தரும் விதமாக இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜரான டிரம்ப்பின் வழக்றிஞர்  கோஹன் தான் குற்றம் செய்ததை ஒத்துக்கொண்டார். டிரம்ப் கூறியதால் தான் நான் அப்படி செய்தேன் என கோன் தெரிவித்தார்.

Fake newses are enemy of the people told donald trump

இது அமெரிக்காவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த செயல் மிகப் பெரிய குற்றம் என்றும் தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் கொடுக்கப்பட்டுள்ளதால் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய  வேண்டும் என அமெரிக்காவில் குரல் எழுந்துள்ளது.

Fake newses are enemy of the people told donald trump

மேலும்  டிரம்பின் முன்னாள் உதவியாளர் பால் மானபோர்ட் வங்கிமோசடி வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த இரண்டு சம்பவங்களும்  டிரம்ப்க்கு மிகுந்த நெருக்கடியைக் கொடுத்துள்ளன. 

Fake newses are enemy of the people told donald trump

இந்த விவகாரம் தொடர்பாக பேட்டியளித்த டிரம்ப், தொலைக்காட்சி மற்றும் செய்தித் தாள்களில்  வரும் பொய்யான செய்திகள்தான் மக்களின் உண்மையான எதிரி என்றும், தனிப்பட்ட முறையில் பத்திரிக்கைகள் மக்களின் எதிரி அல்ல என்றும் தெரிவித்தார்.

Fake newses are enemy of the people told donald trump

தன்னைப்பற்றி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த செய்தியில் 80 சதவீதம் பொய்யான செய்தி என்றும், மீதமுள்ள 20 சதவீதம் என்னைப் பற்றி நல்லமுறையில் எழுதவில்லை என்றும் டொனால்டு தெரிவித்தார்.

அதே நேரத்தில் தன்னை பதவியிலிருந்து நீக்கினால் அமெரிக்க பொருளாதாரம் சீர்குலையும் எனவும், ‘எல்லா பணிகளையும் சரியாக செய்யும் ஒருவரை எப்படி பதவியிலிருந்து நீக்க முடியும் என எனக்கு தெரியவில்லை” என்றும் டிரம்ப் ஆவேசமாக தெரிவித்தார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios