ஒரு திட்டத்தை அறிவித்துவிட்டால், குறிப்பிட்ட காலத்திற்குள் அது முடியும் வரை பிரதமர் மோடி தூங்கமாட்டார் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்ட்ரா மாநிலம் லத்தூரின் மெட்ரோ ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. சுமார் 153 ஹெக்டர் நிலப்பரப்பில் அமையவுள்ள மெகா திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழாவில், சிறப்பு விருந்தினர்களாக ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலும், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸும் கலந்துகொண்டனர். 

அப்போது, விழாவில் பேசிய பட்நாவிஸ்,  பிரதமர் மோடி ஒரு திட்டத்தை அறிவித்துவிட்டால், குறிப்பிட்ட காலத்துக்குள் அத்திட்டம் முடியும் வரை, சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகளை அவர் தூங்கவிடமாட்டார்.  திட்டம் முடியும் வரை அவரும் தூங்கமாட்டார் என தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்தார்.

இத்திட்டம் அறிவிக்கப்பட்ட இரண்டே மாதத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது ரயில்வே வரலாற்றில் முதல் முறையாகும் எனவும் பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.