Asianet News TamilAsianet News Tamil

விதிமீறிய கட்டடங்களை வரன்முறை செய்வதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு.. தமிழக அரசு உத்தரவு.

விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்களால், பல்வேறு காலகட்டங்களில் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதையடுத்து,  விதிமீறல்களுடன் கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறைப்படுத்துவதற்கான புதிய சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றியது. 

Extension of time limit for standardization of derelict buildings for another 3 months .. Government of Tamil Nadu Order.
Author
Chennai, First Published Jul 12, 2021, 11:44 AM IST

விதிமீறல்களுடன் கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறை செய்வதற்கான கால அவகாசத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், சென்னை தவிர்த்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் நகர் ஊரமைப்பு இயக்ககம் கட்டிடத்துக்கான திட்ட அனுமதியை வழங்கி வருகின்றன. 

Extension of time limit for standardization of derelict buildings for another 3 months .. Government of Tamil Nadu Order.

இருப்பினும், விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்களால், பல்வேறு காலகட்டங்களில் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதையடுத்து, விதிமீறல்களுடன் கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறைப்படுத்துவதற்கான புதிய சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றியது. அதன்படி கட்டிடங்களை வரன்முறைப்படுத்த வேண்டுவோர், வழக்கமான வளர்ச்சிக் கட்டணம், கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள தளப்பரப்பு குறியீடுகளுக்கு ஊக்க தளப்பரப்பு குறியீட்டுக் கட்டணம், வாகன நிறுத்துமிட குறைபாடு கட்டணம், 

Extension of time limit for standardization of derelict buildings for another 3 months .. Government of Tamil Nadu Order.

திறந்தவெளிப் பகுதி விதிமீறல்களுக்கான கட்டணங்களையும் செலுத்த வேண்டும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசம் கடந்த ஜூன் 30ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் தற்போது மேலும் 3 மாத காலத்திற்கு கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios